நாங்கள் இனவாதிகள் அல்லர், தேசப்பற்றாளர்கள் (Video)

சிங்கள மக்கள் வந்து இங்கு வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒரு இனவாதிகளாக நாங்கள் இல்லை. நாங்கள் இனப் பற்றாளர்கள். எங்களுடைய மண்ணை அபகரிப்பதனை தான் நாங்கள் வெறுக்கிறோம். அதற்கெதிராகத் தான் நாங்கள் போராடுகின்றோம். இங்கு எத்தனையோ ஆயிரம் பேர் நிலங்கள் இல்லாமல் இருக்கின்றார்கள் அவர்களுக்கு இந்த நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படாமல் அரசின் அனுசரணையில் எங்களுடைய நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதனைத் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். என நிமிர்வுக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
 அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு,

 மணலாறு பகுதியில் தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டார்கள். இதனைத் தான் நாங்கள் எதிர்க்கின்றோம். அப்படியான குடியேற்றத் திட்டங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அரசாங்கம் சிங்கள மக்களை துரத்திவிட்டு தமிழ்மக்களை கொழும்பில் குடியேற்றவில்லை. தமிழ் மக்களுக்கு நிலங்களைக் கொண்டு போய் சிங்கள பகுதிகளில் கொடுக்கவில்லை. கொழும்பில் இருக்கும் தமிழ் மக்கள் தங்கள் சொந்த உழைப்பில் பணத்தை செலுத்தி நிலங்களை வீடுகளை வாங்கி இருக்கின்றார்கள். இங்கிருக்கின்ற மக்களுக்கு இங்கிருக்கின்ற நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதன் நோக்கம் முழு இலங்கையையும் பௌத்த சிங்கள மயப்படுத்துவது. தமிழர் தாயகம் என்று சொல்லி ஒன்றும் இருக்கக் கூடாது. எல்லா இடமும் சிங்கள மக்களை கொண்டு வந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக கலந்து விட்டு அவர்கள் பின் ஊதிப் பெருப்பிப்பார்கள். அப்போது தமிழினம் காணாமல் போகும். எப்படி நீர்கொழும்பில் தமிழ் மக்கள் இல்லாமல் போனார்களோ அந்த நிலைமை இங்கும் வரும்.

 கிழக்கு மாகாணத்தின் 1900 ஆண்டு குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரங்களை எடுத்துப் பார்த்தால் சிங்கள மக்களின் எண்ணிக்கை மிக மிக சொற்பம். இன்று அம்பாறையில் தமிழ் மக்கள் வீதம் 20 ஆக சுருங்கி விட்டது. தமிழ் மக்கள் கணிசமாக இருந்த திருகோணமலையில் இன்று 37 வீதம் தான் தமிழ் மக்கள். இந்நிலைமை முல்லைத்தீவுக்கும், யாழ்ப்பாணத்துக்கும் வர நீண்டகாலமெடுக்காது. தமிழர் தாயகம் என்ற ஒன்று இருக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் செயற்படுகின்றார்கள்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.