நம் பூமியை மீட்டெடுப்போம் - சர்வதேச பூமி தினம் இன்றாகும்
இந்தப் பூமியையும் அதில் உள்ள உயிரினங்களையும் பாதுகாக்கும் நோக்குடன் உலக பூமி தினம் வருடாந்தம் ஏப்ரல் 22 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. 

இப்புவியானது மனிதர்கள் உட்பட பல கோடி உயிரினங்களின் உணவு, உறைவிடத்தை உறுதி செய்யும் பெரும் இயற்கை தொகுதியாகும். 'நம் பூமியை மீட்டெடுப்போம்' என்பதே இந்தாண்டின் கருபொருள். 

ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இது மனித வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் வாழ முடியாது. 

சூழலை மாசடையாமல் அடுத்த தலைமுறையிடம் எடுத்து செல்ல வேண்டும். அவர்கள் பூமியின் எதிர்காலத்தை காப்பாற்றுபவர்கள். இயற்கையை நாம் கவனித்துக் கொண்டால் இயற்கையும் நம்மை பாதுகாக்கும். 

 இன்று யாழ்ப்பாணத்திலும் இயற்கை வழி இயக்கத்தினரால் பூமி தின நிகழ்வுகள் இணையமூடாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. 

 சர்வதேச பூமி தினம் தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் ந.சிறீஸ்கந்தராஜா.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.