முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தல் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும்
முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலையும் ஆகக் கூடிய பட்சம் தமிழ்வீடுகளை நோக்கி மக்கள் மயப்படுத்த வேண்டும். ஒரு சடங்காக அல்ல. ஒரு வாழ்க்கை முறையாக.தமிழ்த் தேசிய அரசியலில் பிரிக்கப்படாத ஒரு பகுதியாக அதை மாற்றவேண்டும்.
எவ்வளவுக்கு எவ்வளவு அது மக்கள் மயப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது மக்களால் தன்னியல்பாக, தன்னார்வமாக, எந்த நிர்ப்பந்தமும் இன்றி பயிலப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது ஒரு மக்கள்மயப்பட்ட நினைவு கூர்ததலாக அமையும். அவ்வாறு மக்கள் மயப்பட்ட ஒரு நினைவு கூர்தல்தான் கூட்டுத் துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும். அந்த அரசியல் ஆக்க சக்திதான் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெறுவதற்கான போராட்டத்தின் பிரதான உந்து விசையாக அமையும்.
நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்தவும், அனைத்துலக மயப்படுத்தவும் ஒரு பொருத்தமான பொதுக் கட்டமைப்பை தமிழ்மக்கள் உருவாக்க வேண்டும். என தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன். முழுமையான நேர்காணல் காணொளியில்,
Post a Comment