தொழில்முயற்சிகளை வளர்த்தெடுக்கும் நிதி நிறுவனங்கள் கட்டமைக்கப்பட வேண்டும்

 


கொரோனா பேரிடர் காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் முடக்க நிலையில் உள்ளது. இலங்கை மட்டுமல்ல உலகெங்கும் இதே நிலை தான். இங்கு பல்வேறு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிகளில் கடன்களை பெற்ற முயற்சியாளர்கள் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். வங்கிகளோ எப்படியாவது முயற்சியாளர்களிடம் இருந்து கடன்களை அறவிடுவதிலே குறியாக உள்ளன. 

கொரோனா பேரிடரின் ஆரம்ப காலங்களில் அரசின் உத்தரவில் வங்கிகளின் கடன்கள் தொடர்பில் சலுகைக்காலங்கள் வழங்கப்பட்டன. ஆனால், குறித்த சலுகை காலத்தின் முடிவில் கடன்களோடு சேர்த்து சலுகைக்கால மாதங்களுக்கான வட்டியையும் சேர்த்தே வங்கிகள் அறவிட்டன. உலகெங்கும் பொருளாதார முடக்க நிலை இருந்தபோதும் பெரும்பாலான முயற்சியாளர்கள் மீள முடியாமல் தவித்த போது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக வங்கிகள் கடன்களோடு சேர்த்து வட்டியையும் அறவிடுவதிலேயே குறியாக இருந்தன. முயற்சியாளர்களுக்கான வங்கிகளாக அவை இருக்கவில்லை. 

முயற்சியாளர்கள் விடயத்தில் இங்குள்ள வங்கிகள் எவ்வாறு இயங்குகின்றன? இவற்றால் எம் தேசத்துக்கு நன்மை உள்ளதா? பல்வேறு விடயங்களையும் விளக்குகிறார் சமூக, பொருளாதார ஆய்வாளரும் ஆலோசகருமான செல்வின். 


  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.