இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவிகளில் அற்புதமானவர் பேராசிரியர் அழகையா துரைராசா
அறிவின் ஆற்றலின் உச்சத்தை அடிமட்ட மக்களுக்கும் கிடைக்கும் வரை கொண்டு வந்தவர் மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராஜா.
நேற்று 11.06.2021 அவரது 27 ஆவது நினைவு தினமாகும். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவிகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர்.
பல்வேறு துயரங்களுடன் போருக்குள் நின்ற மக்களுக்கான வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்த பேராசிரியருடனான பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் சமூக, பொருளாதார ஆய்வாளரான செல்வின்.
Post a Comment