மரக்கறி நாற்றுகள் உற்பத்தியில் இளம்பெண் முயற்சியாளர்
யாழ்ப்பாணம் - கொக்குவில் பொற்பதியைச் சேர்ந்த யது என்கிற இளம்பெண் தன் வீட்டுக்கு அருகே உள்ள மிகச் சிறிய இடத்தில் இயற்கை முறையில் மரக்கறி நாற்றுகள், பூங்கன்றுகள், மரக்கன்றுகளை உற்பத்தி செய்வதுடன் சிறியளவிலான வீட்டுத் தோட்டமும் செய்து வருகிறார். இவர் ஏற்கனவே இயற்கை வழி இயக்க செயற்பாடுகளிலும் இணைந்து செயற்பட்டமையினால் சிறப்பான அனுபவங்களையும் பெற்று தனது சிறியளவிலான வீட்டு தோட்டத்தையும் வினைத்திறனான முறையில் நிர்வகித்து வருகிறார்.
மரக்கறி நாற்றுக்களையும், சிறிய பைகளில் வளர்க்கப்பட்ட மரக்கறிக் கன்றுகளையும் விற்பனை செய்து வருகிறார். கொரோனா பயணத்தடை காலத்தில் வீட்டுத் தோட்ட ஆர்வம் எம் மக்களிடையே அதிகமாக இருந்தது. அப்படியான காலங்களில் இவரைப் போன்ற இளம் முயற்சியாளர்கள் இயற்கையோடு ஒன்றித்த முயற்சிகளை எடுத்து எம் மக்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.
இவருக்கு இன்னும் தனது சிறிய முயற்சியை எதிர்காலத்தில் விஸ்தரிக்கும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அதற்கான நிலமோ, பொருளாதார பலமோ அவரிடம் இல்லை. ஆனாலும் தன் முயற்சியை விடாது தொடர்ந்து வருகிறார். அவரது வீட்டுத் தோட்ட அனுபவங்கள் காணொளியில்,
தொடர்புக்கு: 0779212781
Post a Comment