ஈழத்து வாசகர்களைக் கவர்ந்த எங்கட புத்தகங்கள் கண்காட்சி

 

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு ‘எங்கட புத்தகங்கள்’ கண்காட்சியும் விற்பனையும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 22.10.2021 ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை 24.10.2021 வரை இடம்பெற்றது. மூன்று நாளும் 2000 வரையிலான பார்வையாளர்கள் புத்தக கண்காட்சியினை பார்வையிட்டிருந்தனர்.

ஏறத்தாழ 420 ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்கள் 600 இற்கும் மேற்பட்ட தலைப்புக்களில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுவர்களுக்கான நூல்கள், துறைசார் நூல்கள், கவிதை, கட்டுரை, சிறுகதை நாவல்கள் என ஈழத்து எழுத்தாளர்களின் பல்வேறு நூல்களை வாசகர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சி, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, சுன்னாகம் பொதுநூல் நிலையம், கோண்டாவில் எங்கட புத்தகங்கள் அலுவலகம் ஆகிய இடங்களில் கண்காட்சி இடம்பெற்றிருந்தது. இதனை எங்கட புத்தகங்கள் குழுமத்தின் அமைப்பாளரான குலசிங்கம் வசீகரன் ஒழுங்கமைத்திருந்திருந்தார்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.