அரச உத்தியோகத்தர்கள் எரிபொருளை காரணம் காட்டி பணிக்கு சமூகமளிக்காமல் இருக்க முடியாது
இலங்கையில் தற்போது எரிபொருள் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் இரவு பகலாக 24 மணித்தியாலங்களை கடந்தும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கிறார்கள். எரிபொருளை காரணம் காட்டி அரச உத்தியோகத்தர்கள் பணிக்கு வருவதில் இடர்பாடுகள் உள்ளதாக கூறியதையடுத்து மாவட்ட அரசாங்க அதிபர்கள் தனியான எரிபொருள் நிரப்பு நிலையங்களை இவர்களுக்கு ஒத்துக்கியுள்ளனர். இதனையடுத்து ஆங்காங்கே அரச உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சமூக முரண்பாடுகளும், மோதல்களும் உருவாகியுள்ளன. இந்நிலை தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொள்கிறார் இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரி செல்வின்.
Post a Comment