அரசின் பங்காளிகளாக இருந்த தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு நடந்தது என்ன?
ஆட்சிக் குழப்பத்தின் பின்னர் அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்கிற கருத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வந்தது. இதற்கு அவர் சார்ந்திருக்கும் கட்சியோ அவரோ மறுப்பு எதனையும் தெரிவித்திருக்கவில்லை.
இந்நிலையில் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் ஆணைக்கு மாறாக கொழும்பு அரசின் பங்காளிகளாக இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்று செயற்பட்ட தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு தமிழ்மக்கள் வரலாற்று ரீதியாக எத்தகைய படிப்பினையை வழங்கி இருக்கிறார்கள் என்பது தொடர்பில் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார் அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கம்.
Post a Comment