பகிரப்பட்ட அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் திணறும் உள்ளூராட்சி சபைகள் (Video)

 


இலங்கையில் உள்ளூராட்சி அமைப்புக்களுக்கு நீண்ட வரலாறு இருக்கின்றது. இலங்கையின் நவீன அரசியல் ஆரம்பிப்பதற்கு முன்னரே உள்ளூராட்சி அமைப்புகள் மிகவும் பலமாக இருந்தன. வலுவான அதிகாரங்களையும் கொண்டிருந்தன. 

இப்போது மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என மூன்று வகையான உள்ளூராட்சி அமைப்புகள் உள்ளன.  இம்மூன்று சபைகளுக்கும் எழுத்து மூலமான வலுவான அதிகாரங்கள் உள்ளன. குறித்த எல்லைகளுக்குள்  தங்கள் அதிகாரங்களை பிரயோகிக்கக் கூடியதான சட்ட ரீதியான ஏற்பாடுகள் உள்ளன. இதில் மத்திய அரசுக்கும், உள்ளூராட்சி அரசுக்கும் இடையிலான உறவுகள் கூட சட்ட ரீதியாக குறிப்பிடப்பட்டுள்ளன. 

இன்று மத்திய அரசாங்கமானது இனவாத அரசாங்கமாக இருக்கின்றபடியால் தமிழ் பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி அமைப்புக்களின் அதிகாரங்களை கணக்கெடுக்காமல் அதனை புறக்கணித்து தங்களுடைய அதிகாரங்களை செலுத்த்துகின்ற செயற்பாடு தான் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் வலி கிழக்குப் பிரதேச சபையில் நடந்த இழுபறியும் மத்திய அரசுக்கும் - உள்ளூராட்சி அரசுக்கும் இடையிலான அதிகாரம் சம்பந்தப்பட்ட விடயமே ஆகும்.      

இவ்விடயம் தொடர்பில் அரசியல் ஆய்வாளர்களான யோதிலிங்கம், நிலாந்தன் ஆகியோர் தெரிவித்த முழுமையான கருத்துகளையும் காணொளியில் காணலாம்.  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.