தமிழ்மக்களுக்கு எதிர்ப்பு அரசியல் ஏன் தேவைப்படுகின்றது? (Video)

 


நாடாளுமன்றத்தில் வீராவேசமாக பேசி விட்டு அதற்கு முரணாக வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஆதரவான இரட்டை நிலைப்பாடு உள்ளது. அந்த இரட்டை நிலைப்பாட்டை     நியாயப்படுத்தும் போது இப்படி எதிர்த்து வாக்களித்தால் சில விடயங்களை அரசாங்கத்தை கொண்டு செய்ய முடியாது என்கிற காரணத்தை அவர்கள் சொல்கிறார்கள். இது எந்தவகை அரசியல்?  அரசாங்கத்தோடு சில விடயங்களை விட்டுக் கொடுத்து தான் காரியங்களை செய்யலாம் என அவர்கள் நம்புகின்றார்களா? என்கிற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல  வேண்டும். 

எதிர்ப்பு அரசியல் என்றால் என்ன என்பதற்கு விடை வேண்டும். ஏனெனில் கடந்த பல தசாப்த நாடாளுமன்ற அரசியலில் எதிர்த்து பேசுவதாகவே காட்டப்பட்டு வந்துள்ளது. அது தமிழ் அரசியலில் என்னத்தை பெற்றுத் தந்தது என்பது முக்கியம். ஆயுதப் போராட்டத்துக்கு  முந்திய எதிர்ப்பு அரசியலால் எதையும் பெற முடியாதிருந்த காரணத்தினால் தான் ஆயுதப் போராட்டம் தொடங்கியது. இப்போது ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரான மிதவாத அரசியல் சூழலில் திரும்பவும் உரைகள் அடுத்தநாள் தலைப்புச் செய்திகளாக வருவதன் மூலம் தமிழரசியலில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாமா என்கிற கேள்வி இங்கே முக்கியம். 

உரைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. உரைகளை விடவும் முக்கியத்துவம் எங்கே வருமென்றால் வாக்களிப்பின் போது நாங்கள் எந்த நிலைப்பாட்டை எடுக்கிறோம் என்பது. அங்கே எங்களது இரண்டு பிரதான கட்சிகளும் முரண்பாடாக நடந்து கொள்கிறது. பட்ஜெட்டுக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்காமல் நழுவிச் செல்கிறார்கள்.  

அரசியல் ஆய்வாளர் நிலாந்தனின் முழுமையான உரையையும் காணொளியில் கேட்கலாம். 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.