கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? 



தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்பது அதன் கட்சித் தலைவராகிய கஜேந்திரகுமார். அவர் அரசியலுக்கு வந்து தான் காசு திரட்ட வேண்டும் என்ற தேவை இல்லை. நிதி ரீதியான அவரது நேர்மையை யாரும் சந்தேகிப்பது இல்லை. கொள்கை ரீதியாகவும் அவரிடம் உறுதிப்பாடு இருக்கின்றது. 

பிரச்சினை என்னவென்று சொன்னால் அவர் தனது கொள்கைகளை மக்கள் மயப்படுத்தும் உத்திகளைப் பொறுத்தவரைக்கும் இன்னும் வெற்றி பெறாதவராக காணப்படுகின்றார். தங்கள் கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியவில்லை. 

தூய தங்கத்தை வைத்துக் கொண்டு நகை செய்ய முடியாது. செம்பைக் கலந்தால் தான் நகை வரும். எவ்வளவு வீதம் செம்பைக் கலக்கப் போகின்றோம் என்பது அந்த அரசியல் கள யதார்த்தத்தை பொறுத்த விடயம். நாங்கள் தூய கொள்கைகளோடு இருந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. 

கொள்கைகள் எதற்கு மக்களுக்கு... மக்களுக்கு வெற்றி பெறுவதற்காகத் தானே கொள்கைகள். அந்தக் கொள்கைகளை மக்கள் மயப்படுத்த முடியவில்லை என்றால் அந்தக் கொள்கைகளின் பொருள் என்ன? நடைமுறைக்குப் போகாத தூய கொள்கைகளுக்கு என்ன பொருள்? 

இன்று அந்தக் கட்சியில் இரண்டாம் நிலைத் தலைவர்களும் வந்து விட்டார்கள்.  அவர்கள் இப்போது மூன்றாம் நிலைத் தலைவர்களையும் கட்டி எழுப்புகின்றார்கள். அந்தக் கட்சி ஒரு கட்டுக் கோப்பாக வருகிறது. 

ஆனால் அவர்களால் சிறுதிரள் அரசியலைத் தான் நடத்த முடிகிறதே ஒழிய பெருந்திரள் அரசியலுக்கு போக முடியாமல் இருக்கின்றார்கள்.  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோட்பாட்டு ரீதியாகத் தான் கதைக்கிறது.  கோட்பாடுகள் மக்களுக்கு விளங்குவதில்லை.  கோட்பாட்டு ரீதியாக ஒரு கட்டத்துக்கு மேல் மக்களுடன் உரையாட முடியாது.  மக்களுக்கு எளிமையான கோஷங்கள், எளிமையான குற்றச்சாட்டுக்கள் தான் விளங்கும்.  

நீங்கள் எவ்வளவுக்கு உங்கள் இலட்சியங்களில் பிடிப்பாக இருந்து கொண்டு  இந்த உத்திகளில் சுதாகரிக்கப் போகிறீர்கள் என்பதில் தான் உங்கள் வெற்றி தங்கியுள்ளது. 

நீங்கள் இதயத்தில் புறாக்களாக இருந்து கொண்டு செயலில் பாம்புகளை போல் தந்திரமாக இருக்க வேண்டும். தேர்தல் மைய அரசியல் இது தான். எனவே செயலில் பாம்புகளைப் போல் தந்திரமாக இருந்தால் தான் நாங்கள் மக்களாணையைப் பெறலாம். மக்களாணையை பெறவில்லை என்றால் சிறுதிரள் அரசியல் நடாத்திப் பயனில்லை. எங்களுக்குத் தேவை பெருந்திரள் அரசியல். ஏனெனில் நாங்கள் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறவேண்டிய மக்கள். கொள்கையை சிறு திரளாக வைத்துக் கொண்டிருப்பதே ஒரு தோல்வி தான். 

அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.