தமிழ் மக்களின் உரிமை வேட்கையை உருக்குலைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி யாருக்கும் விலைபோகாத தலைமையாக இவர்கள் இருக்கின்றார்கள். என தெரிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2009 இனவழிப்பு நடந்த பிறகு சம்பந்தர் இன்னும் வெளிப்படையாகவே தடம்புரளத் தொடங்கி விட்டார். அதில் பெண்கள் சார்பில் நான் இருக்கிறேன். இளைஞர் அணி சார்பில் கஜேந்திரன் இருக்கிறார். கூட்டுறவு அமைப்பு சார்ந்து சிவநேசன் இருக்கிறார். இவ்வாறு பல கட்சிகளும் பொது அமைப்புக்களும் சேர்ந்த ஒன்று தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
2009 க்குப் பிறகு தாங்கள் தங்கட பாட்டில் சில காரியங்களை செய்து கொண்டு போனதே ஒழிய நாங்கள் அதிலிருந்து வெளியேறினது அல்ல. அவர்கள் கூட்டமைப்பை களவெடுத்துக் கொண்டு போனது தான் நடந்தது. கூட்டமைப்பை சூறையாடியது மட்டுமல்ல கொள்கையையும் கைவிட்டவர்கள்.
2009 க்குப் பிறகு கேட்பாரில்லை என்ற துணிவில் முற்றிலும் தடம் மாறி நாங்கள் அதற்குள் இருந்தால் சிக்கல். நாங்கள் கொள்கையோடு நிற்போம். தான் கொள்கையைக் கைவிட்டு விட்டு கூட்டமைப்பையும் எடுத்துக் கொண்டு ஓடினார்.
இனவழிப்புக்கு பின்னர் சம்பந்தர் கொள்கையைக் கைவிட்டு கூட்டமைப்பையும் சூறையாடி சென்றதன் பின்னர் கொள்கையோடு நின்றது யாரெனில் நானும் கஜேந்திரகுமாரும், கஜேந்திரனும் தான். இன்றும் கொள்கையில் உறுதி யாருக்கும் விலைபோகாத தலைமையாக இவர்கள் இருக்கின்றார்கள்.
தமிழ்மக்களை ஒற்றுமையுடையவர்களாக பெரும் திரளாக அணிதிரட்டுவதன் மூலம் தான் மீண்டும் அந்த ஒற்றுமையை நிலைநாட்டி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கலாம். மக்களுக்கான அரசியலின் ஓர் அங்கமாக தேர்தல் இருப்பதனை நான் நிராகரிக்கவில்லை.
Post a Comment