ஈழத்தமிழர் அரசியல் பாரம்பரியத்தில் அப்புக்காத்து அரசியல் (Video)
ஈழத்தமிழ் அரசியலை பொதுவாக அப்புக்காத்து அரசியல் என அழைப்பார்கள். அந்த அரசியற் பரப்பில் அதிகமாக காணப்பட்டது சட்டத்தரணிகளே என்பதனால் அவ்வாறு அழைக்கப்பட்டது. ஆனால், அவை பெருமைக்குரிய சொற்றொடர்கள் அல்ல. மாறாக தமிழ் மிதவாதத்தின் இயலாமையை தோல்வியைக் குறிக்கும் சொற்றொடர்களாகவே பயன்படுத்தப்பட்டன.
2009இற்குப் பின் மறுபடியும் அதே அப்புக்காத்து அரசியல் மேலெழத் தொடங்கி விட்டது. தற்பொழுது தமிழ் தேசியக் கட்சிகளில் முன்னணியில் நிற்கும் பலரும் சட்டத்தரணிகளே. தமிழ் அரசியல் பாரம்பரியத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் அறிவியல் பாரம்பரியத்தில் சட்டத்தரணிகளாக பிரகாசித்த பலரும் ஒன்றில் தொழில்சார் சட்டத்தரணிகளாக மாறி நன்கு உழைத்தார்கள் அல்லது தாம் உழைத்த புகழையும் காசையும் அரசியலில் முதலீடு செய்து அரசியல் விலங்குகளாக மாறினார்கள்.
இந்த இரண்டுக்கும் இடையில் சட்டச் செயற்பாட்டாளர்களாக மாறி பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உதவி புரியும் சட்டச் செயற்பாட்டாளர்கள் மிகமிகக் குறைவு. சட்டச் செயற்பாடு இயக்கங்களும் மிகமிகக் குறைவு.
(நேர்காணலை முழுமையாக காணொளியில் காணலாம்)
(இந்த நேர்காணல் தேர்தலுக்கு முன் பதிவு செய்யப்பட்டது)
Post a Comment