ஒரு தேசிய இனத்தின் பண்பாட்டு கூறுகளை அழிப்பதும் இனப்படுகொலை தான் (Video)



யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் அழித்தொழிக்கப்பட்டது.  

இந்த அழித்தொழிப்புக்கு எதிரான போராட்டம் என்பது தமிழ் மக்களுடைய உணர்வுகளோடு கூடிய  போராட்டமாக இருந்தபடியால் உலகம் தழுவிய போராட்டமாக வளர்ந்தது.  


நினைவுகூரல் உரிமை என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமை.  எங்களுடைய கலாசாரத்தில் அந்த நினைவுகூரல் உரிமைக்கு வலுவான இடமிருக்கிறது.  

இறந்தவர்களை நினைவுகூருவதனை ஒரு சமூகக் கடமையாக மேற்கொள்வது எங்களுடைய மரபில் இருக்கின்ற வழக்கம். நடுகல் வழிபாடு கூட எங்கள் மரபில் வலுவாக இருக்கின்ற ஒன்று. ஒரு இனத்தை தாங்குகின்ற தூண்களை அழிப்பது தான் இனவழிப்பு. 

நிலத்தை பறிக்கிறது, மொழியை அழிக்கிறது, பொருளாதாரத்தை அழிக்கிறது, கலாச்சாரத்தை அழிக்கிறது, அவை தான் உண்மையில் இனவழிப்பு இதன் தொடர்ச்சியாக தூபி அழிப்பு கூட உண்மையில் இனவழிப்பு தான்.

 நினைவுத்தூபி இடித்தழிப்பு தொடர்பில் பல்வேறு விடயங்களையும் பகிர்ந்து கொள்கிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம்.  

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.