பொத்துவில் - பொலிகண்டி எழுச்சிப் பேரணி - பிரகடனம் (Video)
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் கடந்த 03.02.2021 தொடக்கம் 07.02.2021 வரை தொடர்ச்சியான மக்கள் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது.
மக்கள் எழுச்சிப் பேரணியின் நிறைவில் வடக்கு - கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் இணைந்து வெளியிட்ட பிரகடன அறிக்கையை சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் வாசித்திருந்தார்.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்துடன், தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்ற இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும். இதன்பால் தொடர்ச்சியாக ஜனநாயக வழியில் போராடுவோம் என உறுதி எடுத்துக் கொள்வதாக பிரகடனத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ் பேசும் சமூகம் எதிர்நோக்குகின்ற 10 முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வினை வலியுறுத்தும் கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.
காணாமல் போனோருக்கு நீதி
தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வௌியேற வேண்டும்
தமிழரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும்
நில ஆக்கிரமிப்பு , சிங்கள மயமாக்கல் நிறுத்தப்படல் வேண்டும்
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்
காணிகள் மீள கையளிக்கப்படல் வேண்டும்
அரசியல் தீர்வுக்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும்
தமிழர் மீதான அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும்
மலையக மக்களுக்கு 1,000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்
ஜனாஸா விவகாரத்தில் மத உரிமை மதிக்கப்பட வேண்டும்
எனும் 10 அம்ச கோரிக்கைகள் நீதிக்கான மக்கள் பேரணியின் இறுதியில் முன்வைக்கப்பட்டன.
பல தடைகளையும் தாண்டி இடம்பெற்ற இப்பேரணியில் சமயத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
Post a Comment