முன்மாதிரிகளும் பின்தொடரிகளும்

முன்மாதிரிகளின் 
முறைதவறிய பயணங்கள்…
மூலைக்கொன்றாய் சிதறுண்டுபோக,
சிந்தனைப் புள்ளிகள் செயலற்றுப் போயின…
பணிவின்றிய வாய்வீச்சுக்கள் இங்கே…
துணிவின்றிய மென்சொற்கள் அங்கே…
தலைமைகளுக்கான வரைவிலக்கணங்கள்
தடுமாறி நிற்கின்றன….
சுய புராணங்களும்…
துடிப்புப் பேச்சுக்களும்…
சும்மாயிருந்த தேன்கூட்டைக் கல்லெறிந்து
விட்டு,
தூரமாய் நின்று வேடிக்கை பார்க்கையிலே,
கொட்டப்படுவது என்றும்
அப்பாவிப் பின்தொடரிகள் தான்…
தாமே தொடக்கமாய் இருக்க முடியாது,
பின்தொடர மட்டுமே பழக்கப்பட்டவர்கள்…
கதை சொல்லிகளால்,
இலகுவாய் கையாளப்படும்,
கைப்பிள்ளைகளாய் என்றும்
எம்மவர்கள்…
முன்மாதிரிகள்,
இருந்தால் மட்டும் பின்தொடருங்கள்…
இல்லையேல்,
தொடக்கமாய் நீங்களே இருங்கள்…
நெம்பு
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.