வாழ்க்கை ஓட்டங்கள்



எதை எதையோ மறைத்து,
எதற்காகவோ ஆவலாய்ப் பறந்து,
நிற்காமல் பறக்கும்
இந்த ஓட்டம் தான் எதற்கு…

சுவாரசியங்கள் தேடும்
சுவையான பயணங்களில்
நாம் அதிகமாய் கவனிப்பதென்னவோ
அடுத்தவர்களின் ஓடுபாதையைத் தான்…

வெற்றிகள் தீர்மானிக்கப்படுவதும்,
சந்தோஷங்கள் அடையாளப்படுத்தப்படுவதும்,
ஒப்பீடுகளின் அடிப்படையில் தானே…

சிறுமைகளின் அருகமர்ந்து,
பெரும் கோடுகளாய் காட்டிக்கொள்வதற்கான விருப்பம்,
பெருமைகளின் நிழலில் அமர்ந்து,
கற்றுக்கொள்ளத் தயாராவதில் இல்லை…

அற்பங்களின் ஆலாபரணங்களையே
அற்புத இசையென்று ரசித்துத் தலையாட்ட
தனியாய் பெருங்கூட்டம் இருக்கையிலே,
ஆற்றல்கள் எப்படி மையம் கொள்ளும்
இந்த மேடையிலே…?

எமக்கான ஓட்டங்களின்
இலக்குகளைத் தீர்மானிப்பதும்
விதிமுறைகளைக் கண்காணிப்பதும்
நாமாகவே இருக்க வேண்டும்…

வெற்றிகள் மட்டுமே
மகிழ்ச்சியின் ஊற்றுவாய் இல்லை…
நிஜமான சந்தோஷங்கள் - எம்முள்ளே
நிரந்தரமாய் புதைந்துபோய் உள்ளன…
தேடிக் கண்டு அடையுங்கள்…
தேவையற்ற ஓட்டங்கள் நிறுத்தலாம்…

நெம்பு
நிமிர்வு மார்கழி 2017 இதழ்-



No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.