முள்ளிவாய்க்காலை கூட்டாக நினைவுகூர்தல் இனப்படுகொலைக்கான நீதிக்கு வலுச் சேர்க்கும்



முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு கூர்தல் வடகிழக்கு தமிழ்மக்களின் தாயக பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் அக்கறையோடு அனுட்டிக்கப்பட்டது.   இந்த முள்ளிவாய்க்கால் தினம் பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒன்று இது ஒரு கூட்டு துக்கத்தை பிரதிபலிக்கின்ற ஒரு நிகழ்வு. எந்தவித சாட்சியமும் இல்லாது கொத்துக் கொத்தாக மக்கள் அழிக்கப்பட்ட போது  அதன் கவலையை துக்கத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு நிகழ்வாக இது அமைந்துள்ளது. நாங்கள் இதனை வலுவாக வெளியே கொண்டு வருவதன் ஊடாகத் தான் இதற்கான நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான அழுத்தங்களை கொடுக்கலாம். இதற்கான நீதி என்பது உள்நாட்டு மட்டத்தில் ஒரு போதுமே கிடைக்கப் போவதில்லை.  இது சர்வதேச மட்டத்தில் தான் கிடைக்க வேண்டும்.  சர்வதேச மட்டத்தில் நீதி கிடைப்பதற்கான அழுத்தத்தினை  இந்த தினத்தினை நாங்கள் வலுவாக அனுட்டிப்பதன் ஊடாக தான் ஒரு வலுவான அழுத்தத்தினை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.  ஒரு இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சமூகம்   சிங்கள அதிகாரக் கட்டமைப்புக்குள் தொடர்ந்தும் வாழ முடியாது.  அவர்களுக்கு நீதி வேண்டும். தங்கள் தலைவிதிகளை தாங்களே நிர்ணயிக்கக் கூடியதாக ஒரு தீர்வு வேண்டும். ஆகவே அந்த தீர்வுக்கான அழுத்தத்தை கூட இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை நினைவு கூர்வதனூடாகத் தான் அந்த அழுத்தத்தைக் கூட எங்களால் வழங்க முடியும்.  அரசிடம் மாத்திரம் எம் மக்கள் கூட்டத்துக்கு தீர்வு வழங்கும் முயற்சியை நாங்கள் விட்டு விட முடியாது.  அதனை சர்வதேசம் பொறுப்பெடுத்து இனவழிப்பு தொடர்ந்தும் வராத வகையில்  ஒரு அரசியல் தீர்வை நோக்கி சர்வதேசம் அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்று சொன்னால் நாங்கள் ஒரு வலுவான அழுத்தத்தினை கொடுக்க வேண்டும். இங்கே மட்டும் அனுட்டித்தால் போதாது. உலகம் முழுவதும் தமிழர்கள் வாழுகின்ற எல்லா நாடுகளிலும் அனுட்டிக்கின்ற நிலைமையை நோக்கி நாங்கள் போக வேண்டும். அப்போது தான் உலக அபிப்பிராயத்தை நாங்கள் கட்டி  எழுப்பலாம். அதனூடாக தான் அழிப்பிற்கான நீதியையும் இனப்பிரச்சினைக்கான ஒரு வலுவான அரசியல் தீர்வையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகவே முள்ளிவாய்க்கால் தினம் என்பது  பல்பரிமாணத்தை உடையது என்பதனை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.  அப்படி பல்பரிமாணமுடைய ஒரு நிகழ்வை அனுட்டிக்கும் போது எங்களிடம் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும். கூட்டுப் பொறுப்பு இருந்தால் தான் எல்லாருமாக சேர்ந்து எப்படி நினைவு கூர்வது என்கிற நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.  எல்லோரும் சேர்ந்து செய்கின்ற போது தான் நிகழ்வு வலுவான நிகழ்வாக வரும். வலுவான நிகழ்வாக வருகின்ற போது தான் நான் ஏற்கனவே கூறிய எல்லா விடயங்களையும் சாத்தியமாக்க கூடியதாக இருக்கும். கட்சி அரசியலுக்கு அப்பால் நாங்கள் ஒரு தேசியத் தளத்தில் நின்று கொண்டு நாங்கள் இந்த விவகாரத்தை அணுக வேண்டும். ஆகவே பொது அமைப்புக்கள் இணைந்து இதற்கென்று தனியான ஒரு குழுவை அமைத்து அந்தக் குழுவின் மூலம் இதனை செய்வதற்கான முயற்சியை நாங்கள் செய்ய வேண்டும். மக்கள் இதனை அனுட்டிப்பதென்றால் எப்படி அனுட்டிப்பது, என்ன நேரம் அனுட்டிப்பது என்பவை தொடர்பில் ஒரு வலுவான தீர்மானம் இருக்க வேண்டும். இந்த வாரத்தையே முள்ளிவாய்க்கால் வாரமாக அனுட்டிக்கும் நிலை இருந்தது. அதுவெல்லாம் தன்னியல்பான முறையாக இருந்ததே ஒழிய ஒழுங்கான ஒரு திட்டமிட்ட   முறைமைக்குள் இருக்கவில்லை. அதனையும் திட்டமிட்ட முறைமைக்குள் கொண்டு வர வேண்டும்.   நாங்கள் தனியே முள்ளிவாய்க்காலை மட்டும் இலக்காக கொள்ளவில்லை. மொத்த இனவழிப்பையே இலக்காக கொள்கிறோம். எங்கே எங்கே எல்லாம் இனப்படுகொலை நடந்ததோ அங்கெல்லாம் நாங்கள் நினைவேந்தலை அனுட்டிக்கிற செயற்பாட்டைச் செய்ய வேண்டும்.    முழுத் தமிழர் தாயகமுமே ஒரு துக்க தினம் மாதிரியான உணர்வை கொண்டு வர வேண்டும். எல்லா கிராமங்களிலுமே நினைவேந்தல் மேற்கொள்ளப்பட வேண்டும்.  நினைவு கூர்தல் என்பது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட உரிமை. அதனையும் விட எங்கள் மரபில் உள்ளது.  இறந்தவர்களை இறந்த இடத்தில் வைத்து நினைவு கூருவது மரபு.  அங்கே நடுகல்லை வைத்து அதில் வழிபடுவது கூட மரபு. ஒன்று சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட விடயம். இரண்டாவது எங்கள் மரபு ரீதியாக   இருக்கின்ற விடயம். ஆகவே எங்களுக்கு அனுட்டிப்பதற்கு முழு உரிமை உள்ளது.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.