கொரோனா: இழந்த பூமியின் இளமையை திரும்ப பெறுவது சாத்தியமா?


கொரோனாவை விடவும் பயங்கரமானது புவி வெப்பமயமாதல்

கொரோனாவும் பின்னரான நிலைமைகளும் குறித்து விளக்குகிறார் அரசியல், சமூக ஆய்வாளரான நிலாந்தன்.

கோவிட் 19 - இது 100 ஆண்டுகளுக்கு பின் வருகின்ற சவால் என்கிற படியால் நாங்கள் இதனை எப்படி அணுகப்போகின்றோம் என்பதனையும் இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும். கோவிட் 19 ஐ எதிர்கொள்வதில் எங்கள் கல்விமுறை வெற்றியடைந்ததா? தோல்வியடைந்ததா? இப்படி ஒரு வைரஸ் தன்னை அப்டேட் பண்ணும் போது எங்கள் கல்விமுறை எங்கே போனது? ஏன் எங்களின் கல்விமுறை அதனை கண்டுபிடிக்க தவறியது. நாங்கள் எல்லாவற்றையும் இனி விட்ட இடத்தில் இருந்து தொடங்கப் போகின்றோம்.
இந்த இடத்தில் யார் யோசிக்க வேண்டும் என்று சொன்னால் உலக நாடுகளின் தலைவர்கள் யோசிக்க வேண்டும். அறிஞர்கள் யோசிக்க வேண்டும். மதநிறுவனங்கள், கருத்துருவாக்கிகள், சிவில் அமைப்புக்கள் யோசிக்க வேண்டும்.

கோப்ரேட் முதலாளிகள் யோசிக்க மாட்டார்கள்.  கோவிட் 19 ஆல் வந்த நட்டத்தை அடுத்த ஒரு மாதத்தில் எப்படி சீர் செய்வது என்று தான் முதலாளி யோசிப்பார்.

பூமியின் இளமையை திரும்ப பெறுவது என்றாலோ அல்லது இயற்கையை நோக்கி திரும்பி செல்வது என்றாலோ  அல்லது பல்பொருள் அங்காடி மைய வாழ்வில் இருந்து நாங்கள் வேறொரு வாழ்க்கைக்கு போவது என்று சொன்னாலோ நாங்கள் கூட்டாக யோசிக்க வேண்டும்.

மனித இனம் சுயசிதைவை நோக்கி போகின்றது என்று சொன்னார் ஸ்டீபன் ஹாக்கிங். இன்று பூமி வெப்பமயமாதல் என்பது கொரோனா வைரசை விட பயங்கரமான  விடயம்.

எனக்கு தெரிந்த ஒரு சூழலியலாளர் சொன்னார். பூமி வெப்பமயமாகும் போது துருவப் பனிக்குள் பழைய யுகங்களின் வைரஸ்கள் இருக்கும்.  துருவப் பகுதிகள் உருகும் போது இந்த வைரஸ்கள் கடலுக்குள் வரும். கடலில் மீனை தொற்றும். பின் மீனை சாப்பிட எங்களை தொற்றும். பழைய யுகங்களின் வைரஸ்கள் அப்டேட் பண்ணிக் கொண்டு வரும் போது அதனுடனும் மோத வேண்டி இருக்கும்.

உலகத்தில் இப்படி ஒரு விடுமுறை முன்னர் இருந்ததில்லை. இதனை சாதாரண மக்கள் யோசிக்க மாட்டார்கள். தலைவர்கள் யோசிக்க வேண்டும். அறிஞர்கள், சூழலியலாளர்கள் யோசிக்க வேண்டும்.  கருத்துருவாக்கிகள் மதத்தலைவர்கள் யோசிக்க வேண்டும். இவர்கள் இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்ட வேண்டும்.

சமூகத்தின் சிந்திக்கும் தரப்புக்கள் இந்தக் காலத்தை ஒரு தவக்காலமாகக் கருதி கூட்டாக சிந்தித்தோமாக இருந்தால்  நாங்கள் பூமியின் இளமையை திரும்ப பெறுவது சாத்தியமாக  இருக்கலாம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.