கொரோனாவும் குடும்ப வன்முறையும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ்



கொரோனா பரவியமையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் விபத்துக்கள் மற்றும் ஏனைய நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவது குறைவடைந்ததால், வீட்டு வன்முறை அதிகரித்துள்ளது என்கிற தோற்றப்பாடு தான் காணப்படுகின்றதே ஒழிய மேற்கு நாடுகள் மாதிரி இங்கே குடும்ப வன்முறைகள் அதிகரிக்கவில்லை.

 இப்பொழுது கொரோனா என்கிற பொதுப் பிரச்சினை கொஞ்சம் பெரிதாக வெளியே வந்துவிட்டது. இதனால் குடும்பத்துக்குள் ஒன்றிணைவு கூடும். மதுபாவனையும் குறைந்து காணப்படுகிறது. எமது நாட்டில் மது பாவனையுடன் இணைந்து தான் குடும்ப வன்முறை அதிகரித்து காணப்படுகிறது.

 முதலிலேயே குடும்பங்களில் பிரச்னைகள் உள்ள குடும்பங்களில் முரண்பாடு கூடத்தான் செய்கிறது. ஆனால், ஏற்கனவே ஆரோக்கியமாக இயங்கி வந்த குடும்பங்கள் இப்போது மிகவும் அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கிறன. 

குடும்பங்களுக்கிடையே முரண்பாடுகள் பெரியளவுக்கு அதிகரிக்காவிடினும், குடும்பங்கள் தங்களுக்கிடையே உள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு இதுவொரு நல்ல சந்தர்ப்பமாகும். எங்களது குடும்ப கட்டமைப்புக்கள் இன்னும் சிதைந்து போகவில்லை.

எங்களுடைய கலாச்சாரத்தில் குடும்ப கட்டமைப்பு என்பது இறுக்கமானதாகவும் வலுவானதாகவும் பாதுகாப்பை தரக் கூடிய அரணாகவும் இன்னமும் இருக்கின்றது என்பது உண்மை தான். நீண்டகாலமாக நடந்த போரில் எம் மக்களுக்கு தாங்குதிறனும் அதிகரித்துள்ளது.

இதனால் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற தன்மையும் உள்ளது. எங்கே குடும்பம் சிதையாமல் இறுக்கமாக ஒருவரை ஒருவர் புரிந்து ஒரு தொழிற்படுகின்ற குடும்பமாக இருக்கும் குடும்பங்களில் சுனாமிக் காலங்களிலும் சரி யுத்த காலத்திலும் சரி இப்போதும் சரி பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.