முள்ளிவாய்க்கால் மணியோசையின் முக்கியத்துவம் (Video)


மே 18 அன்று எழுப்பப்படும் மணி ஓசை தமிழ் மக்களின் கூட்டுத் துக்கத்தினதும் கூட்டுக் கோபத்தினதும் குறியீடாக இருக்கும்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18 அன்று எழுப்பப்படும் மணியோசை நேரத்தைக் கூட எம்மால் ஒன்றாக ஒரே நேரத்தை தீர்மானிக்க  முடியவில்லை.

நாங்கள் கோவிட் 19 இன் பெயராலும் ஒன்றிணையத் தவறிவிட்டோம்.   Zoom, ஸ்கைப் போன்ற இந்த செயலிகளும் எங்களை ஒன்றிணைக்கவில்லை. 2009 இலிருந்து நாங்கள் எதனையும் கற்றுக்  கொள்ளவில்லை. என்பதனை தான் இம்முறையும் நினைவு கூர்தல் நிரூபித்திருக்கிறது.

இறுதியில் நினைவு கூர்தல் என்று வரும் போது பிரிந்து பிரிந்து நிற்கிறோம். நினைவு கூர்தலுக்கான ஏற்பாட்டுக் குழு ஒரு நேரத்தை அறிவிக்கிறது. தமிழ் சிவில்சமூக அமையமும், பல்கலை மாணவர் ஒன்றியமும் அந்த நேரத்தையே ஏற்றுக் கொள்கின்றார்கள். விக்கினேஸ்வரன் 6.18 என்று அறிவிக்கிறார். தமிழரசுக் கட்சி 8 மணி என்கிறது. பின் சர்வமதப் பேரவை  6.15 என அறிவித்தது.

ஒரு மணி அடிக்கின்ற விடயத்தில் கூட யார் மணியை கட்டுவது என்கிற பிரச்சினை. ஒரு விளக்கேற்றும் நேரத்தை கூட, மணியடிக்கும் நேரத்தைக் கூட பொது நேரமாக கண்டுபிடிக்க முடியாதளவுக்கு நாங்கள்  இருக்கின்றோம்.

வழிபாட்டிடங்களில் ஒன்றாக மணி ஒலி எழுப்பப்படும் போது அந்த ஓசை முழுச் சமூகத்தையும் தன்னை நோக்கி ஈர்க்கும். அது ஒரு துயரத்தின் குறியீடாக இருக்கும். அது ஒரு கூட்டுத் துக்கத்தின் கூட்டுக் கோபத்தின் குறியீடாக இருக்கும். மணி ஒலிக்கும் அந்த மூன்று நிமிடங்களுக்கு அது முழுச் சமூகத்தையும்  தன்னை நோக்கி கட்டிப் போட்டு விட்டிருக்கும். அப்படி அசாதாரணமாக எல்லா வழிபாட்டிடங்களிலும் மணி ஒலிக்கப்படுவதில்லை.

ஒரு பொதுவான நேரத்தை கண்டுபிடித்து மணியை ஒலிப்போமாக இருந்தால் அது தமிழ் கூட்டுப் பிரக்ஞையை இன்னும் வலுப்படுத்தும்.  தேசியம் என்பதே கூட்டுப் பிரக்ஞை தான். எனவே அது தமிழ் மக்களை திரளாக்கும்.

அடுத்த ஆண்டாவது தாயகத்தில் மே 18 நினைவேந்தல் மணியோசை, விளக்கேற்றும் நேரம் என்பதனை ஒரேயொரு பொதுவான நேரமாக முன்னரேயே தீர்மானிப்போம். 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.