தமிழ்மக்களுக்கு இல்லாத ஜனநாயக உரிமைகள் சிங்கள - முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை

 


அரசியலில் வைரஸாக கருதப்பட்ட 20 ஆவது திருத்தத்தை நாட்டுக்குள் கொண்டு வந்தபோது அதற்கெதிரான சிவில் எதிர்ப்பு திரளக் கூடாது என்பதற்காக கொவிட் 19 ஐ காரணம் காட்டி தான் அரசாங்கம் ஊர்வலங்களையும் மக்கள் கூடும் நிகழ்வுகளையும் தடை செய்தது. 

ராஜபக்சக்களின் வெற்றிக்குப் பின் பௌத்த மத, கிறிஸ்தவ மத சங்கங்கள் கூட வாய்திறக்கவில்லை.  சிங்கள எதிர்க்கட்சிகள் கூட அப்படியே வாயடங்கி போயின. மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்தார்கள். அதற்கு பிறகு தான் சிங்கள எதிர்க்கட்சிகள் கூட தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். ராஜபக்சக்களின் பெரு வெற்றியின் பிறகு எல்லா சிவில் அமைப்புகளும் கூட அப்படியே அமிழ்ந்து போய்விட்டன என்பது தான் உண்மை. 

இதற்குள் ஒரு செய்தி இருக்கிறது. இலங்கைத்தீவின் ஒட்டுமொத்த ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பதில் தமிழ்மக்களுக்கும் உள்ள பங்கு என்ன என்பது தெரியவருகிறது. தமிழ் மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் இருந்தால் தான் அதனை சிங்கள மக்களும், முஸ்லிம் மக்களும் அனுபவிக்கலாம். தமிழ்மக்களுக்கு இல்லாத ஜனநாயக உரிமை சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை. இது விடயத்தில் தமிழ்மக்கள் தான் எதிர்ப்பை துலக்கமாக பதிவு செய்திருக்கிறார்கள். 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.