காலநிலை மாறுதல் அரசியல்


காலநிலை மாற்றத்திற்கான பாரீஸ் உடன்பாடு அதிக அரசியல் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.  ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாறுதல் தொடர்பான 21ஆம் மாநாடு பிரான்ஜின் தலைநகரமான பாரீஸில் 2015 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில்  கூடியது.  உலகில் எழுந்துள்ள காலநிலை மாற்றத்திற்கு நாடுகளின் சுற்றுச்சூழலுக்கு விரோதமான கொள்கைகளே காரணம் என்றே நோக்கில் மகாநாட்டில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய உடன்பாடு 197 நாடுகளிடையே எட்டப்பட்டது.  இத்தகைய உலக சூழலியலுக்கான உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப கடந்த வைகாசி மாதம்  அறிவித்திருந்தமை அதிக அரசியல் முக்கியத்துவத்தினை பெறுகிறது.

  சர்வதேச மட்டத்தில் காலநிலை அரசியல் ஒன்று தெளிவாக அரங்கேறி வருகிறது.  அதனை இலங்கை அரசியலிலும் காண முடிகின்றது.  தென் இலங்கை அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் அடுத்த ஐம்பது வருடங்களில் யாழ்ப்பாணம் பாலைவனமாகும் என்று ஓர் அதிர்ச்சியான அரசியலை வெளிப்படுத்தினார்.  அமெரிக்கா-சீனா இலங்கை ஆகிய மூன்று நாடுகளின் தளத்திலும் நிலவும் காலநிலை அரசியலை அலசுவதே ,க்கட்டுரையின் நோக்கம்.

அமெரிக்கா பாரீஸ் உடன்படிக்கையிலிருந்து வெளியேறியமையானதற்கு அது குறிப்பிடும் காரணங்களை முதலில் அவதானிப்போம், அமெரிக்காவில் பெரும்பாலான நிலக்கரி மற்றும் அனல்மின் நிலையங்களை முற்றாக மூடி விடுவதென்றும முன்னாள் ஜனாதிபதி ஒபாமா இணங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது. சீனாவும் இந்தியாவும் அடுத்த 13 வருடங்களுக்கு இத்தகைய குறைப்பினை படிப்படியாக மேற்கொள்ள அனுமதிக்கும் அதேவேளை  அமெரிக்கா அவற்றை விரைவாக செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்க முடியாது.  இதனால் இது ஒருதலைப்பட்சமான உடன்படிக்கை. அதனால் அமெரிக்கா இவ்வுடன்பாட்டிலிருந்து வெளியேறுகிறது என குறிப்பிட்டது.

இங்கு அமெரிக்காவின் பிரச்சனை சுற்றுச்சூழல் அல்ல.  மாறாக அமெரிக்காவின் தொழில்துறை பாரீஸ் உடன்பாட்டினால் பாதிக்கப்படும் என்பது மட்டுமேயாகும்.   மேலும் இதற்காக அமெரிக்கா அதிக செலவீனத்தை செய்வதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.  ஏற்கனவே இவ்வுடன்பாட்டில் ஒபாமா நிர்வாகம் ஒப்பமிட்டிருந்தது. காலநிலை மாற்றத்தின் வேகத்தைக் குறைப்பதற்கான செயற்பாட்டு நிதியத்திற்கு   செலுத்துவதாக உத்தரவாதமளித்த 3மில்லியன் அமெரிக்க டொலர்களில் 500 மில்லியனை  அது வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இது ஒரு ஐந்தொகைக் கணக்கீட்டு அரசியலாகவே ட்ரம்ப் நிர்வாகம் கருதுகிறது.  இங்கு சீனாவின் கை ஓங்குகிறது என்பதே ட்ரம்பின்; அரசியலாகும்.  ஓட்டுமொத்த பூகோளத்தின் வெப்பநிலையையே அதிகரித்து மனித இனத்தின் இருப்பையே அழித்துவிடக்கூடிய காலநிலை மாற்றப் பிரச்சனையையும் இதர  அரசியல் போட்டிகளில் ஒன்றாகவே அமெரிக்கா கருதுகிறது. ஆனால் சீனாவோ 2009 ஆம் ஆண்டுகளில் கொப்பன்கேஹனில் கூடப்பட்ட ஐக்கிய  நாடுகள் சபையின் காலநிலை மாறுதல் தொடர்பான 15 ஆம் மாநாட்டிலிருந்து சுற்றுச் சூழலில் அதிக கவனம் கொள்கிறது.  அதனூடாக உலக நாடுகளை கவர்ந்திழுப்பதில் வெற்றிகண்டு வருகிறது.  உலகத்தை  ஈர்ப்பது வன்அதிகாரத்தினால் அல்ல  மென் அதிகாரத்தினால் மட்டுமே சாத்தியப்படுமென சீனா உணர்த்தி வருகிறது. இது ஒரு சீனா-அமெரிக்க இழுபறி அரசியல். இதன் தொடக்கம் கொப்பன்கேஹன் சந்திப்பு.  அதிலிருந்து உலக நாடுகள் மத்தியில் சீனாவின் செல்வாக மேலோங்கியுள்ளது.

இதனாலேயே அமெரிக்காவின் அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கு விரோதமானதென்பதை சீனா அடையாளம் காட்டி வருகிறது.  இதனை ஒபாமா நிர்வாகம் வெற்றிகரமாக கையாண்டது. ட்ரமப்;பி;ன் நடவடிக்கையை ஒபாமா கண்டித்துள்ளார்.  ஆனால் அமெரிக்காவுக்கான ஐ.நா வின் தூதுவர் சீனாவை கண்டித்துள்ளார். அமெரிக்காவின் சுற்றுச்சூழல் சார்ந்த கொள்கையை பற்றி வேறு எந்த நாடும் பேச முடியாதென ட்ரம்ப் நிர்வாகத்தினர் செயல்படுவதென்பது அமெரிக்காவின் பலவீனத்தை காட்டுகிறது.

அமெரிக்க-சீன போட்டி சுற்றுச்சூழலில் அதிகமானதாக மாறிவருகின்றது.  காரணம் சீனா நிலக்கரிப்பயன்பாட்டினை அதிகம் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் முதலாவது நாடு. ஆனால் 2016 முதல் அதில் அதிக மாற்றங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.  சீனா தனது தேவைக்கான எரிவாயுவில் ஐந்தில் ஒரு  பங்கை இயற்கையாகவே தருவித்துவிட்டது. இ,து அமெரிக்காவை விட பல மடங்கு அதிகமானது.  இதனால் அமெரிக்காவை முந்திக் கொண்டு சூழலைப் பாதுகாப்பதில் உலகளாவிய ரீதியில் முதன்மை நாடென நிறுவி வருகிறது. இது அமெரிக்க அரசியலில் உள்ள பலவீனமேயாகும்.

இலங்கையின் வெள்ள அனர்த்தத்துக்கு சர்வதேச வல்லரசு எனும் நிலையை ஏனைய நாடுகளின் இயற்கை அழிவுகளுக்கு கடனும் நன்கொடையும் நாடுகளுக்கு வழங்குவதனால் மட்டும் சாத்தியப்படுத்த முடியாது.  இதனால் தொடர்ச்சியாக நாடுகளை கையாள முடியாது.  இயற்கையின் அழிவுகளால் தேடிக்கொள்ளும் அதிக வருமானத்தை பங்கு போடுவதனைவிட அத்தகைய இயற்கையை பாதுகாக்க முயல்வதே நிரந்தரமான உதவியும், கடனும், நன்கொடையுமாகும்.  இலங்கையைப் பொறுத்தவரை உலக நாடுகளிடமிருந்து உதவிகளை பெறுவதென்பது அரசியல் வாதிகளின் நலனுக்கானது.  அமெரிக்கா, சீனா, இந்தியா என்பன தென் இலங்கை வெள்ள அனர்த்தத்திற்கு உதவி வருவதென்பது தென் ,லங்கை அரசியலுக்கான முதலீடாகும்.  அரசியல் வாதிகள் இயற்கையை பாதுகாப்பதற்கு எத்தகைய பங்காற்றுகின்றார்கள் என்பது சுனாமிக்கான நிதியுதவியிலிருந்து இலங்கை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.  அதனைக் கடந்து பணிபுரியும் அமைச்சர்களையும், ஆட்சியாளர்களை கண்டு கொள்வது கடினமாக உள்ளது.

 தற்போது வடக்கு மாகாணசபையில் அப்படி இயற்கையை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிக்கான அமைச்சர் ஒருவரை அதிகார துஷ்பிரயோகம், பணம் வீண்விரயமாக்கப்பட்டது என்ற பெயரில் அரசியலிருந்து அப்புறப்படுத்த பலர் முனைகின்றனர்.  இத்தகைய முயற்சிக்கு பின்னால் ஐம்பது வருடங்களில் யாழ்ப்பாணம் பாலைவனமாகும் என்ற உரைக்கும் இடையில் அதிக தொடர்புள்ளதென்பது தெளிவாக உணரமுடிகிறது.  அரசியலும், அதன் நிறுவனங்களும் மனித சமூகத்தின் அடிப்படைகளுக்கானவை.  ஆனால் இன்றைய நட்பு முதலாளித்துவத்தில் (Corny Capitalism)  நிதிநிறுவனங்களும் அரசுகளுக்குமான உறவு பலமானதாக மாறிவிட்டது.  அரசுகள் மக்களுக்கு பதிலளிப்பதில் கரிசனை கொள்கின்றன.  இயற்கையின் மீள் கட்டமைப்பு நிதி நிறுவனங்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. எனவே பாரிஸ் முதல்- வடமாகாணசபை வரை காலநிலை மாறுதல் தெளிவான அரசியல் போட்டியை உருவாக்கியுள்ளது.  ,தில் முடிவு போலிகளின் வெற்றியாக   அமையும்.

கலாநிதி கே.கணேசலிங்கம்-

நிமிர்வு ஆனி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.