பல உயிர்களின் ஏக்கம் இது


விட்டாச்சு நிலம்…
விடிந்தாச்சு வாழ்க்கை… - என்று
விடிகாலை வந்தாச்சு…
போட்டிருந்த முள்வேலிக்குள்,
தலையைவிட்டுப் பார்க்கையிலே..
வீடு இருந்தது போல்…
ஒரு தடமும் காணவில்லை…
மூடிய புல் தரையில்,
அத்திவார அடையாளங்கள்…
குத்திட்ட கண்களுக்குக்
கொஞ்சமாய்த் தெரிந்தது..
தலைமுறைகள் வாழ்ந்த வீட்டை,
தரையோடு மண்ணாக்கி…
முளைத்த புல் தரையில்…
உதைபந்து விளையாட்டு…
சும்மாயிருக்கும் படை…
சுறுசுறுப்பாய் விளையாட…
மைதானம் வேண்டுமென்று,
மண்ணாக்கிப் போயினரோ…
மக்கள் வாழ்வுதனை..
காணாமல் ஆக்கப்பட்ட…
வாழ்வு இழந்த… வாழ்விடங்கள்…
குப்பை சுமக்கும் பெரும் கிணறுகளின்...
நீர் இழந்த தவிப்பும்…
நினைவுகளின் வழித்தடங்கள்,
தொலைத்த நெஞ்சங்களின் தவிப்பும்..
மீண்டு வரவில்லை இன்னும்…
எந்தையுந் தாயும், - முந்தையரும்…
மகிழ்ந்து குலாவிய இடம்…
பாசங்களின் வாசங்களால்…
பரிசுத்தமான இடம்…
இறப்பதற்குள்…. ஒரு முறையேனும்;;…
எம் மண் தொட்டுத் திலகமிடுவதற்காய்…
தம் உயிரை நீட்டிப்பிடித்துக் - காத்திருக்கும்
பல உயிரிகளின் ஏக்கம் இது…


நெம்பு
நிமிர்வு ஆடி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.