முல்லையில் காடழிப்பு, சட்டவிரோத குடியேற்றம்: சிங்கள அரசின் சதி




விரல் விட்டு எண்ணக் கூடிய சில இளைஞர்களின் குறுகிய கால தொடர்ச்சியான உழைப்பே மக்கள் பங்கேற்புடனான “முள்ளியவளை காட்டா  விநாயகர் கோவிலில் இருந்து கூழா முறிப்பு நோக்கிய”  பாரிய கவனயீர்ப்பு போராட்டத்துக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில்  இனப்பரம்பலைச்  சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து 16.07.2017 ஞாயிற்றுக்கிழமை காலை  11 மணிக்கு முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று “சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான இளைஞர் அணியின்" ஏற்பாட்டில்  பெரும் எழுச்சியுடன் இடம்பெற்றது.

கூழாமுறிப்பில் இருந்து வாரிவண்ணான் காடு வரைக்குமான பிரதேசமானது  முள்ளியவளைக்கும் - ஒட்டுசுட்டான் வீதிக்கும், நெடுங்கேணி - புளியங்குளம்வீதிக்கும் இடைப்பட்ட 177 ஏக்கர் காட்டை  அழித்து முஸ்லிம்  மக்களைக் கொண்ட குடியேற்றம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள்  தற்போதுமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே இனப்பரம்பலை சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் இத்திட்டத்தை எதிர்த்தேமேற்படி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

“வனம் அழித்தால் இனம் அழியும்”, “வனத்தை அழிப்பதும் எங்கள்வாழ்வுரிமையை அழிப்பதும் ஒன்றே”, “நிலத்தொடர்ச்சியை சிதைத்து எம்இனத்தொடர்ச்சியை அறுக்காதே”, “இது இனவாதம் அல்ல வன வதைக்கு எதிரான வாதம்”, “எம் அடையாளம் இழந்து அகதியாக வாழமாட்டோம்”, “எங்கள் வனத்தாய் மடியில் தீ வைக்காதே”, “இயற்கை சமநிலையை குழப்பி எம் வாழ்வை சிதைக்காதே”,“எங்கள் நிலம் எங்கள் வனம் காப்பது எமது கடமை” போன்ற பல்வேறு பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தாங்கியிருந்தனர். 

முல்லைத்தீவில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் உள்ள காடுகளை அழித்து முஸ்லீம் மக்களை குடியேற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் ஞானதாஸ் காசிநாதர்  கருத்து தெரிவிக்கையில்,
இந்த நிலைமையானது வடக்கிலும் தமிழ் - முஸ்லீம் மக்களிடையே நிரந்தர பகைமைக்கும்,  மோதல் போக்குக்கும் செல்ல வழிவகுத்து விடும்.முஸ்லீம் அரசியல்வாதி ரிசாத் இந்த குடியேற்ற நாடகத்தை மேற்கொள்வது அவருடைய தேர்தல் அரசியல் எனும் "அற்ப நோக்கத்தை" அடிப்படையாககொண்டதாயினும்...  சிங்கள பேரினவாத அரசு "தன் அடுத்த கட்ட நகர்வுக்கான நீண்ட கால திட்டத்திலேயே" அவருக்கு இந்த அனுமதியை வழங்கி உள்ளது.

அடுத்த கட்ட நகர்வு யாதெனில், “கிழக்கில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றும் முயற்சியை சுமூகமாக நடைமுறைப்படுத்துவது ஆகும் "
   ஏன் "சுமூகமாக" எனச் சொல்கிறேன் என்பது உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன்.

இந்த குடிப்பரம்பல் மிஷனை நிறைவேற்றிய பின்னரே நீங்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் "புதிய அரசியல் யாப்பு" உருவாக்கப்படும்
அந்த "புதிய அரசியல் யாப்பில்" வைக்கப்படப்போகும் பெரிய ஆப்பு -தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும்!

சிங்கள பேரினவாதத்தினதும், இந்திய மேலாதிக்கத்தினதும்மேற்கத்தைய  ஏகாதிபத்தியங்களினதும் நலன்களை பேணும் வகையில் தமிழரும் முஸ்லிம்களும் ஒருவரோடுருவர் முட்டி மோதி சிங்களத்தோடு அண்டிப்  பிழைத்து எம் பிள்ளை குட்டிகளை பெருக்குவோமாக.

இதுக்குதான் ஆசைப்படுகிறோமா என்றார்.

நிமிர்வு ஆடி 2017 இதழ் 

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.