நிமிர்வுகள் - 3- முறைதவறும் முன்மாதிரிகள்
அப்புக்காத்தரும் அன்னம்மாக்காவும்…
அப்புக்காத்தர்: இண்டைக்கு இவையளுக்கு ஒரு வழி பண்ணாட்டி… நான் யார் எண்டு பாருங்கோவன்…
அன்னம்மாக்கா: ஏன்… என்னது…? யாருக்கு..?
அப்புக்காத்தர்: எனக்கு இப்ப இருக்கிற கோபத்திற்கு… நீங்க வேற…
அன்னம்மாக்கா: என்ன ஏதேனும் பிரச்சினையே…?
அப்புக்காத்தர்: பிரச்சினையோவோ… நீங்களே சொல்லுங்கோ….. நான் யார்…?
அன்னம்மாக்கா: உது என்ன கேள்வி… நீங்க இந்த ஊரில உள்ள ஒரு மெத்தப்படித்த பெரிய மனிசர்…அப்புக்காத்தர்….
அப்புக்காத்தர்: அது சரி… எங்கட ஊர்க் கோயிலில நான் யார்…?
அன்னம்மாக்கா: ஓ…. அதுவோ… நீங்கள் தான் இப்ப கோயில் தர்மகர்த்தா சபையின்ர தலைவர்….
அப்புக்காத்தர்: அதைத்தானே அடிக்கடி எல்லோரும் மறந்து போயினம்….
அன்னம்மாக்கா: ஏன்… என்ன நடந்தது…?
அப்புக்காத்தர்: கூட்டத்தில நான் கதைக்கேக்க, யாரும் என்னைப் பார்த்து….
அதுவும் என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கலாமோ…. சொல்லுங்கோ…
அன்னம்மாக்கா: ஏன்… கேள்வி கேட்கக்கூடாதோ…?
அப்புக்காத்தர் :நல்ல கதை… நான் யார்…?
அன்னம்மாக்கா: (என்ன திருப்பி முதலில இருந்து….) தலைவர்…
அப்புக்காத்தர்: தலைவரைப் பார்த்துக் கேள்வி கேட்கலாமோ… தலைவர் சொல்லுறதைக் கேக்கிறதோ…. திருப்பி என்னைப் பார்த்துக் கேள்வி கேட்கிறதோ…?
அன்னம்மாக்கா: இது என்ன புதுக்கதை… நீங்கள் யார்?
அப்புக்காத்தர்: நான் தான் தலைவர்…
அன்னம்மாக்கா: தலைவர் எண்டா?
அப்புக்காத்தர்: கோயில் நிர்வாகத்தின்ர தலைவர்..
அன்னம்மாக்கா: அதுசரி.. என்னெண்டு தலைவராய் வந்தனீங்கள்?
அப்புக்காத்தர்: என்னெண்டு எண்டா?
அன்னம்மாக்கா: இவ்வளவு பேர் ஊர்ல இருக்க,நீங்கள் மட்டும் என்னெண்டுதலைவராய் வந்தனீங்கள்?
அப்புக்காத்தர்: ஓ.. அதுவோ.. நான் என்ன சும்மாவே வந்தனான்..
பொதுக்கூட்டம் வைச்சு எல்லாச் சனமும் வந்து, கூடப்பேர் வாக்குப்போட்டுத்தானே நான் இந்தத் தலைவராய் வந்தனான்..
அன்னம்மாக்கா: ஓம்.. அப்ப உங்களைத் தெரிவு செய்தாக்கள் உங்களைக் கேள்வி கேட்கக்கூடாதோ..?
அப்புக்காத்தர்: ம்;ம்.. அது வந்து.. கேட்கலாம் தான்.. எண்டாலும் நான் தலைவரெல்லோ..
----------+------------------+------------------+-------------------------
நெம்பு
நிமிர்வு ஆவணி 2017 இதழ்-
Post a Comment