நிமிர்வுகள் - 5 - சிறார் வதை
அப்புக்காத்தர்: என்ன மாதிரியாம் இந்தமுறை உந்த ஜந்தாமாண்டுச் சோதனை முடிவுகள்…?

அன்னம்மாக்கா: அதுக்கென்ன..  அது பரவாயில்லாம வந்திருக்குது போல…

அப்புக்காத்தர்: என்ன பரவாயில்லாமலோ…? கனக்கப் பெற்றார் வெளியில திரிய வெக்கப்பட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கினம் போல கிடக்குது…

அன்னம்மாக்கா:  இது என்ன அவ்வளவு பெரிய விசயமே…?

அப்புக்காத்தர்: பின்ன… இப்பவே இப்படிக் குறைஞ்சா… எப்படி வளர்ந்து நல்லாப் படிக்கப் போகுதுகள்..

அன்னம்மாக்கா: பிள்ளைகளை முதலில சும்மா வளர விடுங்கோவன்… பிறகு அதுகள் தன்ர பாட்டில படிப்பினம்...

அப்புக்காத்தர்:  சும்மா விடுறதோ, பிள்ளைகளை… நல்ல கதை. பெரிய சேரிட்ட கிளாசுக்கு விடவேணும்…

அன்னம்மாக்கா: ஓ… அப்படியே...

அப்புக்காத்தர்: இப்ப ஆண்டு மூன்று தொடக்கம் பிள்ளைகளை அங்கே விடோணும்…

அன்னம்மாக்கா: என்னது… மூன்றாம் ஆண்டு தொடக்கமோ… அப்ப மூன்று வருஷம்… A/L  படிப்பு மாதிரியெண்டு சொல்லுங்கோ…எட்டு வயசிலேயே படிக்கத் தொடங்கிறதோ?

அப்புக்காத்தர்: இல்லை...  அதுக்கு முதலே... மூன்று வயசிலேயே எழுத்துப் பழக  ரீயுசனுக்கு விடவேணும்...

அன்னம்மாக்கா:  மெய்யாவோ…?  மூன்று வயசில அதுகளுக்கு முறையாக் கதைக்கவே தெரியாமலெல்லோ இருக்குங்கள்…

அப்புக்காத்தர்: கதைக்கத் தெரியாட்டியென்ன….எழுத்தறிவு முக்கியம்...

அன்னம்மாக்கா: ஓம்... அதெண்டாச் சரிதான்...  மூளையைப் பாவிக்காத எழுத்தறிவுச் சமூகத்தைத் தான் நாங்கள் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறம்...

அப்புக்காத்தர்: ஏன் இப்படிச் சொல்லுறீங்கள்…

அன்னம்மாக்கா: பெரிய படிப்பெல்லாம் படிச்சு, நிறைய சோதனைகளெல்லாம் பாஸ் பண்ணி, பெரிய பதவிகளில இருக்கிற எத்தனை பேர்; தங்கட தாய்மொழிலசொந்தமாய் நாலு வசனம் எழுதத் தெரியாம இருக்கினம்...

அப்புக்காத்தர்: என்ன அப்படியோ...

அன்னம்மாக்கா: உப்பிடியே உந்த சின்னனுகளை போட்டு வதைச்சுக் கொண்டிருந்தா, எதிர்காலம் இன்னும் நாசமாய் போய்விடும்…
----------+------------------+------------------+-------------------------

நெம்பு
நிமிர்வு ஐப்பசி 2017 இதழ்-

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.