நிமிர்வுகள் - 8- கடவுள் காப்பாற்றுவார்!





அப்புக்காத்தரும்….  அன்னம்மாக்காவும்.;..

அப்புக்காத்தர்:  அப்பவுக்கும் இப்பவுக்கும் பெரிய  வித்தியாசங்கள் இல்லைத் தானே...

அன்னம்மாக்கா:  ஏன்..?  இண்டைக்கு என்ன கதை கொண்டுவாறியள்...

அப்புக்காத்தர்:  முந்தி அந்தச் சண்டையில இத்தனை பேர் இறப்பு, இந்தக் குண்டுவெடிப்பில இவ்வளவு பேருக்குக் காயம் எண்டு கதைச்சுக் கொண்டிருந்தனாங்கள்…

அன்னம்மாக்கா:  ஓமோம்…!

அப்புக்காத்தர்:  இப்ப அந்தச் சந்தியில இந்த வாகனத்தில அடிபட்டுக் காயமாம்… உந்த றோட்டில போஸ்ற்றோட மோதிச் சாவாம் எண்டு பாத்து பாத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறம்...

அன்னம்மாக்கா:  விடிய வெளிக்கிடக்கயே உதுகள் நேர்ந்து கொண்டுதானே வெளிக்கிட்டு வருகுதுகள்…

அப்புக்காத்தர்:  என்னெண்டு… ‘கடவுளே காப்பாற்று’எண்டு கேக்கிறவையோ?

அன்னம்மாக்கா:  நல்ல கதை… சாகிறன்… பந்தயம் பிடிஎண்டு கொண்டல்லோ மோட்டச்சைக்கிள முறுக்கிறதுகள்

அப்புக்காத்தர்:  அதெண்டாச் சரிதான்… இயமனுக்கே சவால் விடுகிற ஆக்கள் தான்.. “ஏலுமெண்டா உன்ர பாசக் கயித்தைப் போட்டு, இந்தமோட்டச்சைக்கிள நிப்பாட்டு பாப்பம்”எண்டு...

அன்னம்மாக்கா:  குழந்தை, குட்டி. குடும்பம் எண்ட நினைப்பும் வாறேல்லையோ உவங்களுக்கு...

அப்புக்காத்தர்: அந்த நினைப்பிருந்தா, கை-கால் வாகன வேகத்தைக் கூட்டுமே…

அன்னம்மாக்கா: அது நாங்கள் செய்யிற பிழை தானே...  மழலைகள் நடந்து பழகேக்க, கீழ நிலத்தில விழுந்தா என்ன செய்யிறனாங்கள்?

அப்புக்காத்தர்: பிள்ளையை எழுப்பிவிட்டு, அழுகையைத் தேத்தி, இந்த நிலம் தானே பிள்ளையை விழுத்தினதெண்டு, நிலத்துக்கு இரண்டடி அடிக்கிறனாங்கள்...

அன்னம்மாக்கா: இப்பவும் பிள்ளைகள் அதைத்தானே செய்யுதுகள்...

அப்புக்காத்தர்: என்ன ஒண்டும் விளங்கேல்லை...

அன்னம்மாக்கா: கண்மண் பாராம ஓடி விழுந்து மண்டையை உடைச்சுப்போட்டு, உவன் மகிந்த றோட்டைப் போட்டுத் தமிழர்களைச் சாகடிக்கிறான் எண்டு கொண்டு திரியுதுகள்...

அப்புக்காத்தர்: கடவுள் தமிழரைக் காப்பாற்றுவாரெண்டு நினைக்கிறியளே…

அன்னம்மாக்கா: அவர் ஏன் காப்பாற்றவேணும்? படைச்ச மற்ற உயிர்களெல்லாம் பிரச்சினை இல்லாமல் வாழுதுகள்… அறிவு கூடி, அடிபடுறதுக்கு கடவுள் என்ன செய்யிறது..

----------+------------------+------------------+-------------------------

நெம்பு
நிமிர்வு  தை 2018 இதழ்


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.