சாலையோரக் கவனங்கள்
சாலையோரங்களை..
சாவோரங்கள் ஆக்கி,
மரணிக்கவெனவே
பயணங்கள் தொடங்கும்…
தற்கொலைதாரிகளாய்…
அதிவேக ஓட்டக்காரர்கள்…

சொந்தக் காசு சேர்த்து,
வாகனம் வாங்கி,
உழைச்ச பணம் எண்ணி
எரிபொருளுக்காய் செலவிட்டால்..
வண்டி பறக்காது.., மனசுக்கு வலிக்குமென்று.

வேகம்,வெறி, வெற்றி…
சாகசம், கெத்து கேளிக்கை என்றும்,
அழைத்தவுடன் எடுக்க அல்லல்படும்,
அலைபேசி அவசரங்கள்…
மொத்தமாய் சிதறும்
சாலையோரக் கவனங்கள்…

இறைவன் படைத்த
உயிருக்கு மாற்றாய்,
இன்னும் எதுவும்
கண்டுபிடிக்கப்படவில்லை…!

உயிரைப் பணயம் வைக்கும்
பயணங்கள் வேண்டாம்…
உயிர்களில் பயம் கொண்டே
பயணங்கள் தொடர்வோம்…
எமக்கென்று உயிர்வாழும்
அன்பு நேசங்கள் நினைவோடு,
நிறைவாய், மகிழ்வாய் என்றும் திரும்புவோம்…

நெம்பு
நிமிர்வு  தை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.