வலைத்தள வாழ்க்கைகள்…


நமக்காய் வாழ்ந்து,
நாலுபேருக்கு நன்மைகள் செய்து
கூடி வாழ்ந்திருந்தோம் - அன்று
நானூறு பேர் பார்ப்பதற்காய் மட்டும்
நடிக்கும் வாழ்க்கை இன்று…

சமூகத்தை இணைப்பதற்காய்
உருவான வலைத்தளங்களை
சொந்த வாழ்க்கைக்கே
உலை வைக்க அனுமதித்ததார் தவறு?
இணைய வாழ்க்கைக்கைச் சொப்பனங்களுக்காய்
இணையைத் துறந்தவர்களை என்ன சொல்ல?…

வாழ்த்துக்கள் கூட…
வலைப்பின்னல்களுக்குள் மட்டுப்பட்ட
காலமிது…- அருகிருக்கும்
உறவுகள் நண்பர்களை விட
முகநூல் நட்புகளே
முக்கியமானவர்கள்…

சமூக அக்கறைக் கொக்கரிப்புக்கள்…
எண்ணங்களை புல்லரிக்க வைக்கும்…
இதுவல்லோ புதுமைச் சமூகம் - என
புருவங்கள் தூக்க வைக்கும்…

வழிகள் திறக்கும்
வலிமைகள் இல்லாத - வெறும்
வாய்ச்சவாடல்களால்
பயன் என்ன விளையும்..?

நிஜமான சமூக மாற்றங்கள் வேண்டி
இணைந்து செயற்படுவோம் -
இணையங்கள் தாண்டியும்…!

நெம்பு
நிமிர்வு  வைகாசி 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.