நிமிர்வுகள் - 14 - தவறும் நெறிகள்!




அப்புக்காத்தரும்….  அன்னம்மாக்காவும்.;..

அப்புக்காத்தர்: வீடு வாசல்லை நிம்மதியாய் இருக்கவும் ஏலாமல் எல்லோ இருக்குது…

அன்னம்மாக்கா: ஓம்.. அதெண்டாச் சரிதான் பாருங்கோ…

அப்புக்காத்தர்: நினைச்சுப் பாக்கவே பயமாய் எல்லோ கிடக்குது…

அன்னம்மாக்கா: முந்தி இளசுகளுக்குத் தான் பிரச்சினை வருமெண்டு கவனமாய் இருப்பம்…

அப்புக்காத்தர்: இப்ப சின்னகுஞ்சுகள் தொடக்கம் வயசுபோனதுகள் வரையாரும் தப்பமுடியாது போல எல்லோ கிடக்குது…

அன்னம்மாக்கா: கலிமுத்திப் போச்சுது…அதான் எல்லாம் தாறுமாறாய் நடக்குது…

அப்புக்காத்தர்: ஓமோம்… என்ன செய்யிற தெண்டே தெரியேல்லை…

அன்னம்மாக்கா: பிரச்சினை முத்தும் மட்டும், நாங்கள் மூடி மறைச்சுக் கொண்டுதானே இருக்கிறம்...

அப்புக்காத்தர்: என்ன சொல்லுறியள்…? விளங்கேல்லை…

அன்னம்மாக்கா: சின்னதப்புகள் செய்யத் தொடங்கேக்கயே அல்லது தொடங்க எத்தனிக்கேக்கையே… குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் தெரிய வரும் தானே…

அப்புக்காத்தர்: ஓமேன்ன… கொஞ்சம் எண்டாலும் தெரியும்தானே…!

அன்னம்மாக்கா: அப்ப எங்கடதம்பி, ஒரு தங்கக் கம்பி அப்படிச் செய்யாது எண்டு தாங்கிறது…

அப்புக்காத்தர்: மற்றாக்கள் சும்மா மாட்டப் பாக்கிறாங்கள் எண்டு தங்கட மனச்சாட்சிக் கெதிராக மூடி மறைக்கிறது… எல்லாம் மலிஞ்சு சந்தைக்கு வந்தாப் பிறகு தான், குடி முழுகிப் போச்சுதென்று திரியுறது…

அன்னம்மாக்கா: நச்சுக் கிளைமுளை வரேக்கையே கிள்ளி எறிய வேணும், அப்பத்தான் மரம் நல்லமரமாய் வளரும்...

அப்புக்காத்தர்: அதுக்கு சுற்றமும் சமூகமும் தான் ஒத்துழைக்க வேணும்…

அன்னம்மாக்கா: இல்லாட்டி இண்டைக்கு இங்க, நாளைக்கு அங்க எண்டு கணக்கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியது தான்..

அப்புக்காத்தர்: வராமல் தடுக்க வேண்டிய வழிகளைப் பார்க்காமல்..

நெம்பு
நிமிர்வு யூலை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.