நிமிர்வுகள் - 18 தலைகள் உருளுது!
அப்புக்காத்தர்: அப்ப இண்டைக்கு என்ன மாதிரி… சூரன் போர் பார்க்கப் போகேல்லையோ..?
அன்னம்மாக்கா: இப்ப கொஞ்ச நாளாய் எத்தனை சூரன்களின்ர போரைப் பார்த்தாச்சு…
அப்புக்காத்தர்: என்ன சூரன்களின்ர போரோ… எனக்கு விளங்கேல்லை…
அன்னம்மாக்கா: உந்த நாட்டு நடப்பு நாடகங்களைத் தான் சொல்லுறன்..
அப்புக்காத்தர்: ஓ. .ஓ.. அதுவோ… அதெண்டாச் சரிதான்… கனக்க சூரன்கள்
தான் போருக்கு வெளிக்கிட்டுட்டாங்கள்..
அன்னம்மாக்கா: நல்லா சுத்தி நிண்டு வேடிக்கை பார்க்கத்தான் சரி…
அப்புக்காத்தர்: சரியாய்ச் சொன்னியள்..
அன்னம்மாக்கா: சூரன்களின்ர போரில உந்த வேசக்காரருக்கு என்ன வேலை…?
அப்புக்காத்தர்: உப்பிடியான நேரத்தில. வேசம் போட்டு ஆடினாத்தானே பிழைப்பு நடக்கும்…
அன்னம்மாக்கா: நானும் ரவுடிதான் பாணியில, நாங்களும் சூரன்தான் எண்டு சும்மா தமாசு பண்ணிக்கொண்டு திரியுதுகள்…
அப்புக்காத்தர்: அரசியல் எண்டா வெறும் அறிக்கை விடுறது மட்டும் தான் எண்டது தானே எங்கட ஆக்களின்ர நினைப்பு..
அன்னம்மாக்கா: இருக்கிற காய்களை வைச்சு விளையாடவும் தெரியாது…
சும்மா கதிரைக் கணக்குக் குந்திக் கொண்டு இருக்குதுகள்…
அப்புக்காத்தர்: அடிச்சு விளையாடவும் தெரியாது… எறிஞ்சு விழுத்தவும் தெரியாது…
அன்னம்மாக்கா: தம்பிரான் புண்ணியத்தில சட்டைப் பை நிறைஞ்சாக் காணும் எண்டு இருக்குதுகள்…
அப்புக்காத்தர்: என்னத்தைச் சொன்னாலும் எங்கட சனம் நம்பும் எண்டு இன்னும் கனவு காணுதுகள்..
அன்னம்மாக்கா: கூட்டங்கள் கூடாமலே முடிவுகள் கூட்டாய் முடிவெடுத்ததாய் சொல்லுவினம்..
அப்புக்காத்தர்: ஓமோம்.. அதுவும் சரிதான்...
அன்னம்மாக்கா: தனிநபருக்குக் காட்டுற விசுவாசத்தில கொஞ்ச சதவீதத்தையேனும் தன்ர இன மக்களின்ர நலனுக்காகக் காட்டலாமே…
நெம்பு
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்
Post a Comment