ஆளும் கலை



வாழும் கலையும் புரியாது,
ஆளும் கலையும் தெரியாது
வட்டத்தில் சுழல்கின்றோம்…

சனங்களின் நியாயத்தை கேளாதோர் - எல்லாம்
ஜனநாயகம் பொய்த்துவிட்டதாய் கூச்சலிடுகிறார்கள்…

புகைகள் தோன்றாமல் பூசல்கள் வருவதில்லை
ஆதிகார உரசல்களில், பொறிவராமல் போவதில்லை
இது ஒன்றும் புதிது இல்லை - உலகிற்கு.
இங்;கு மட்டுமே இப்படியானதாய்
மிகை கூவல்கள் எதற்கு…?

இன்று மட்டும் ஜனநாயகம் பேசுவோரேல்லாம்
இதுவரை காலமும் எங்கு போயினர்..?
தங்களின் ‘படிக்கு’ குறை வரப்போகுதென்று
மற்றவர் கறைகளைப் படம் பிடிக்கின்றனர்…
வெளிநாட்டு மூளைகளை துணைக்கழைக்கின்றனர்…

இன்று இங்கிருப்போர் - நாளை எங்கும் இருப்பர்
அரசியல் கீதைப்படி அனைத்தும் சரியே…
அதிகார சூதாட்டத்தில் மக்களே பகடைக் காய்கள்…
எதிர்ப்புக்காய், ஆதரவுக்காய் மக்கள் கூட்ட
நாடகங்கள்…

பிழை விடாதவனை விட– பிழைகளைத் தெரியவிடாமல்
காப்பவனே பெரியன் ஆகின்றான்…

அழிப்பவனே ஆக்குகிறான்…
ஆக்குபவனே அழிக்கின்றான்…- இது சமயநெறியும் கூட.

நெம்பு
நிமிர்வு கார்த்திகை 2018 இதழ்

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.