கொரோனா நிலைமையை சிறார்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும்: உளநல மருத்துவ நிபுணர் எஸ். சிவதாஸ்
கொரோனாவும் சிறுவர் உளவியலும் குறித்து உளநல மருத்துவ நிபுணர் சிவசுப்பிரமணியம் சிவதாஸ் நிமிர்வுக்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு, பொதுவாகவே சிறுவர்களுக்கு ஊரடங்கு என்கிற விடயம் புதிதாக திடீரென்று வந்ததாகவே உள்ளது. கொரோனா தொற்று தொடர்பில் பெரியவர்களும் பதற்றமடையும் போது அது குழந்தைகளையும், சிறார்களையும் பாதிக்கும்.
பொதுவாகவே இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் பதற்றமடைந்தால் அதனை கிரகிக்கும் ஆற்றல் உள்ளது. பெற்றோர்கள் முதலில் பதற்றப்படாமல் இருப்பதன் மூலம் பிள்ளைகளை பாதுகாக்க முடியும். சிறார்களுக்கு தங்களது பிரச்சினைகள் தொடர்பில் வார்த்தைப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். நாங்களும் தெளிவில்லாமல் சொன்னால் விளங்க கடினமாக இருக்கும். அதனால், பெற்றோர்கள் சரியான தெளிவுடன் இந்த நிலைமையை பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்த வேண்டும். தொடர்ந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் பிள்ளைகள் சலிப்படைகிறார்கள். இதனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே மோதல் ஏற்படுகின்றது. ஆகவே சலிப்படையாமல் நாட்களை கொண்டு போதவற்குரிய சரியான நேர திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும். உடல் பயிற்சிகளோடு மனதை ஒருங்கமைக்கும் பயிற்சிகளையும் மேற்கொள்வது அவசியமானதாகும்.
Post a Comment