இனப்படுகொலைக்கான ஆதாரங்களை முழுமையாக திரட்டாத தமிழ் அரசியல் தலைமைகள்


நாங்கள் இப்பொழுதும் கொல்லப்பட்டவர்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் எண்ணிக் கொண்டிருக்கும் மக்கள்.    நாங்கள் இன்றைக்கும் அது தொடர்பிலான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாமல் இருக்கும் மக்கள். ஜெனீவாவுக்கு போனீர்கள் என்றால் தமிழ் அமைப்புக்கள், கட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புள்ளி விபரத்தோடு வரும்.  எங்களிடம் சரியாக தொகுக்கப்பட்ட புள்ளி விபரங்கள் இல்லை. மையப்படுத்தப்பட்ட ஆவணக் காப்பகங்கள் இல்லை.    
இனப்படுகொலையை நிரூபிக்கும் போதியளவு ஆதாரங்கள் ஜெனீவாவில் முன்வைக்கப்படவில்லை. என்று சுமந்திரன் சொல்வது சரி. ஆனால் விசாரணை முடிந்தது என்று சொல்வது தான் பிரச்சினை. நடந்தது விசாரணை அல்ல. வெளிநாட்டில் இருக்கும் சில தமிழர்களை அவர்கள் விசாரித்து இருக்கின்றார்கள். இங்கிருந்து நாங்கள் அனுப்பிய சில முறைப்பாடுகளை அவர்கள் பரிசீலித்து இருக்கின்றார்கள். இதில் இலங்கை அரசாங்கம் விசாரிக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட தரப்புக்கு வெளியே தான் விசாரணை நடந்துள்ளது.   அந்த அடிப்படையில் இது விசாரணை அல்ல. அப்படி ஒரு விசாரணை நடக்கவேயில்லை. அப்படி ஒரு விசாரணையை தான் நாங்கள் கேட்கின்றோம். நிலைமாறுகால நீதியென்பது அப்படி ஒரு விசாரணையை தான் செய்யச் சொல்லிக் கேட்கிறது.   இனப்படுகொலையை நிரூபிப்பதற்கு வேண்டிய சான்றாதாரங்களை நாங்கள் முன்வைக்கவில்லை என்பது உண்மை.  கடந்த பத்தாண்டுகளில் தமிழரசியல் தலைமையாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் அதனை செய்திருக்க வேண்டும்.  தாங்கள் அதனை செய்யாது விட்டுவிட்டு வேறு யாராவது அதனை செய்வார்கள் என எதிர்பார்க்கின்றார்களா? அவர்கள் செய்யாமல் விட்டதனால் தான் இனப்படுகொலைக்கு எதிரான ஆதாரங்கள் போதியளவு தொகுக்கப்படவுமில்லை.  தொகுக்கும் ஒரு செயற்பாட்டை அவர்கள் முன்னெடுக்கவுமில்லை.  அப்படி தொகுக்கப்பட்ட ஆவணம் உரிய இடத்துக்கு சமர்ப்பிக்கப்படவும் இல்லை.   வட மாகாணசபை இனப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு  human rights data analysis group ஐ கூப்பிட்டு எங்களுக்கு ஒரு சரியான புள்ளி விபரத்தை பெற்றுத்  தருமாறு கேட்கவில்லை. அது உலகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட துறைசார் நிபுணர்களைக் கொண்ட அமைப்பு.   அவர்களின்  புள்ளி விபரத்துக்கு ஐ.நா கூட கட்டுப்படும். குறித்த புள்ளி விபரங்களை திரட்டுவதற்கான அரசியல் களச் சூழல் வரவில்லை என தமிழ்  அரசியல் தலைவர் ஒருவர் சொன்னார். அப்போது மஹிந்த ஆட்சியில் இருந்தார். பிறகு மைத்திரி - ரணில் ஆட்சியிலும் அதனை செய்யவில்லை.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.