கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அளித்த பதில்கள் வருமாறு,
நாங்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொள்கையை கைவிட மாட்டோம். உள்ளூராட்சித் தேர்தல்களில் கூட பதவிகளுக்காக விலை போக மாட்டோம் என்பதனையும் நிரூபித்திருக்கின்றோம்.
பதவிக்காக சோரம் போகிறவர்கள் அல்ல என்பதனை எங்களின் வாழ்க்கையிலே காட்டியிருக்கின்றோம். இது தான் எங்களின் பலம். இரண்டாவது மிகப்பெரிய பலம் எங்களோடு இளைஞர்களும் தேசிய சிந்தனை மிக்க உணர்வாளர்களும் அணிவகுத்து நிற்கிறார்கள். இதுவும் எங்களுக்கான பலம்.

நாங்கள் ஜனரஞ்சக அரசியல் செய்வது கிடையாது. போலி வாக்குறுதிகளை அள்ளிவீசுவது கிடையாது. மக்களை ஏமாற்றி கவர்ச்சி திட்டங்களை பற்றி பேசுவது கிடையாது. இவை எங்களின் பலவீனமாக இருக்கலாம்.
மூவர் கொண்ட அணி தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்று விமர்சிக்கப்படுகின்றதே?
மூவர் கொண்ட அணியாக தான் நாங்கள் இருந்தோம். ஆனால், இப்போது அப்படி இல்லை. இப்போது 80 பிரதேசசபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
ஆளுமையுள்ள பலர் எங்களோடு இருக்கின்றார்கள். எமது வேட்ப்பாளர் பட்டியலை பார்த்தீர்களாக இருந்தால் ஒவ்வொரு தனித்தன்மை வாய்ந்தவர்களையும் நாங்கள் உள்வாங்கி இருக்கின்றோம்.
எந்தவொரு அமைப்பின் உருவாக்கத்திலும் ஆரம்பத்தில் ஒரு சிலர் தான் அதனை முன்னுக்கு கொண்டு வருவார்கள். பின்னால் பலரும் இணைந்து போவார்கள். எங்களது அமைப்புக்கு அடிமட்டத்திலே கட்டமைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் இப்போது இல்லை.
வடக்கு கிழக்கில் இரண்டாவது பெரிய கட்சியாக வெறும் 10 வருடத்தில் வளர்ந்திருக்கின்றோம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.