வடமாகாணசபையில் தமிழினப்படுகொலை தீர்மானத்தை நிறைவேற்றுவதில் எதிர்கொண்ட சவால்கள்


ஈழத்தில் நடந்தது தமிழினப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து நடந்தது இனப்படுகொலை தான் என்று நிரூபிப்பதற்கு ஒரு மக்கள் பிரதிநிதியாக சிவாஜிலிங்கம் செய்தது என்ன? என்கிற கேள்வியை அவரிடமே முன்வைத்தோம்.

 ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட எம் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். நடைபெற்றது இனப்படுகொலை என்பதனை முதலிலே சொல்ல வேண்டும். இன்றைக்கும் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. வளங்கள் சூறையாடப்படுகின்றன.

இனப்படுகொலை பல்வேறு வகைகளில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள் இனப்படுகொலைக்கு ஆதாரம் இல்லை என்கிறார்கள்.

 வடக்கு மாகாண சபையில் இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவர நான் எடுத்த முயற்சிகள் பல்வேறு வகையில் முறியடிக்கப்பட்டன. வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ. வீ. கே சிவஞானம் அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை மேற்கோள் காட்டி எழுதிய கடிதத்தில் இதனை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது என காரணங்களை அடுக்கி இருந்தார். அதே போல் சம்பந்தன் ஐயாவும் சிவாஜி இந்தப் பிரேரணையை இப்போதைக்கு எடுக்க வேண்டாம். நாங்கள் பேசுவோம் என்றார். மாவை சேனாதிராஜாவும் சொல்வார், சிவாஜி இப்போது வேண்டாம் பொறுத்துக்கொள்ளுங்கோ என்பார்.

 ஒரு உறுப்பினருக்கு இருக்கக் கூடிய உரிமை ஒருவர் பிரேரித்தால் இன்னொருவர் ஆமோதித்தால் அதனை வாக்கெடுப்புக்கு விட வேண்டும். அதில் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படலாம் அல்லது தோற்கடிக்கப்படலாம். சபை நடவடிக்கைகளுக்கு புறம்பாக அவைத்தலைவர் இதனை எடுக்க முடியாது என்று மறுத்த போது தான் நான் சென்று செங்கோலை தட்டி விட்டு அது உடைந்ததன் பின்னர் தான் வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயா கவனத்தில் எடுத்தார். தனக்கு ஒரு மாதம் தவணை தாருங்கள் சபையில் நானே இனப்படுகொலை தீர்மானத்தை கொண்டுவருவேன் என சொன்னார். 10.02.2015 ஆம் ஆண்டு வடமாகாணசபையில் இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.