தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த பத்தாண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது?


அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு,

 தமிழ் மக்களின் கனவுகளை நோக்கி யதார்த்தத்தை வளைப்பதற்கு தவறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முதலில் தங்களை புலிநீக்கம் செய்தார்கள். அதன் விளைவாகத் தான் கஜேந்திரகுமார், பத்மினி போன்றவர்கள் வெளியேற வேண்டி வந்தது. அதற்குப் பிறகு அவர்கள் தங்களை தேசிய நீக்கம் செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் கிட்டத்தட்ட ஆயுதப் போராட்டத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை போலவும் தாங்கள் ஆயுதப் போராட்டத்தோடு முழுதளவு உடன்படவில்லை போலவும் காட்டிக் கொள்ளும் விதத்தில் ஆயுதப் போராட்டத்தின் பின்னடியாக வந்த இயக்கங்களை எல்லாம் மெல்ல மெல்ல கழட்டத் தொடங்கினார்கள். இப்போது ரெலோவும், புளொட்டும் ஒட்டிக் கொண்டுள்ளன.

 இன்று தமிழரசுக் கட்சி தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழரசுக் கட்சி தான் ஒரு மிதவாத பாரம்பரியத்தில் இருந்து வந்த கட்சி என்றும் தன்னை ஒரு தூய மிதவாத கட்சி என்றும் காட்ட முற்படுகிறது. அது பிழை.

 இவர்கள் தான் ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்தவர்கள். இவர்கள் தான் வாய்களால் வன்முறைகளை தூண்டிய ஆட்கள். இரத்தத் திலகம் இது என்று கேட்கும் போதே வன்முறையை தூண்டி விட்டார்கள்.

இவர்கள் தான் அன்று இயக்கங்கள் எல்லாம் உருவாக காரணமான அரசியலை முன்னெடுத்த ஆட்கள். ஆயுதப் போராட்டத்துக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்ல முடியாது. ஆயுதப் போராட்டத்தின் விளைவாக கிடைத்தது தான் மாகாணசபை. அது போதாமல் இருக்கலாம். 

அதை அனுபவித்துக் கொண்டு ஆயுதப் போராட்டத்தோடு சம்பந்தப்பட்டவர்களோடு தாங்கள் தொடர்பில்லை என்ற மாதிரி காட்டிக் கொள்ள முடியாது.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.