தமிழ் பொதுசன அபிப்பிராயத்தை தனியொரு கட்சியிடம் ஒப்படைத்து சாதித்தது என்ன?
நாங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் குலைந்து போய் விடுவோம் என்பது தோற்ற இனத்தின் மனப்பயம் தான். இங்கே ஒற்றுமையாக இல்லாவிடில் குலைந்து போய் விடுவோம் என்றில்லை.
எங்களுடைய நிலைப்பாடுகளில் நாங்கள் கவனமாகவும், தீர்க்கமாகவும் இல்லாவிடிற் தான் நாங்கள் குலைந்து போய் விடுவோம். போலியான ஒற்றுமைக் கோஷங்களில் ஒரு பிரயோசனமும் இல்லை.
எல்லாவற்றையும் ஒரு தரப்பிடம் விட்டு விட்டு கடந்த பத்து வருடங்களில் என்னத்தை சாதித்தோம்.
இம்முறையும் அதே தரப்பை மாத்திரம் நாங்கள் திருப்பி அனுப்ப போகிறோமா? அல்லது அந்தத்தரப்பு எடுக்கக் கூடிய நிலைப்பாட்டை சவாலுக்கு உட்படுத்தக் கூடிய ஒரு தலைமையை நாங்கள் அனுப்பப் போகின்றோமா? அப்படி அனுப்புவதுதான் முக்கியம் என்று தான் தான் கருதுவதாக தெரிவித்தார் சட்டத்தரணியும், முன்னாள் யாழ். பல்கலை சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமரவடிவேல் குருபரன்.
Post a Comment