தமிழ் மக்களின் கூட்டு உளவியலை சிதைக்கும் கூட்டமைப்பு (Video)

2009 முடிந்தவுடன் நாங்கள் மக்களை சந்திக்கும் போது அவர்களிடம் இரண்டு கேள்விகள் இருந்தன. என்ன நடந்ததென்றும் தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறது என்றும் தெரியவில்லை. உண்மையில் என்னவென்று சொன்னால் மக்களிடம் நடந்த கதைகளை திருப்பிக் கூற வைத்து அவர்களின் அந்த வெளிப்பாடுகளுக்கு ஊடாக எதிர்காலத்தில் தாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்பதனை தீர்மானிக்க வைத்திருக்க வேண்டும். இது தான் ஆற்றுப்படுத்தலுக்கு மிக அடிப்படையான விடயம். அதை நாங்கள் செய்திருக்க முடியும். என தெரிவித்தார் யாழ். பல்கலையின் முதுநிலை விரிவுரையாளரான கலாநிதி. க. சிதம்பரநாதன். 

 அவர் மேலும் முக்கியமாக தெரிவித்த விடயங்கள் வருமாறு, மக்களை அடித்து நொறுக்கினால் பிறகு மீண்டும் ஒரு எழுச்சி இங்கு நடந்துவிடக் கூடாது. மீண்டும் மக்கள் ஒற்றுமைப்பட்டுவிடக் கூடாது. இளைஞர்கள் செயல்முனைப்பானவர்களாக ஆகி விடக் கூடாது. அதற்கான தரகராக தான் சம்பந்தர் செயற்பட்டார். மக்கள் மத்தியில் அரசியல் இல்லை. 

அவர்கள் மத்தியில் எந்த தெளிவூட்டலும் இல்லை. அரசியல் கலந்துரையாடல்கள் இல்லை. அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாது. மக்கள் மத்தியில் புகுத்தப்பட்ட கருத்துகள் என்னவென்று சொன்னால் இனி எங்களால் ஏலாது. நாங்கள் சிறுபான்மையினம். நாங்கள் ஒரு மாதிரி சமாளித்துப் போக வேண்டும். அடங்கிப் போய்த் தான் காரியங்களைப் பெற வேண்டும். யதார்த்தமாக சிந்திக்க வேண்டும். ஏதாவது சலுகைகளைப் பெற வேண்டும். இப்படியான நிலையில் உள்ள பெரிய ஆபத்து என்னவென்றால் தங்களால் எதுவும் ஏலாது என நினைக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். முப்பது வருடங்கள் போராடிய எம் மக்கள் தான் தங்களுக்கு என்ன வேண்டும் என தீர்மானிக்க வேண்டும். சுமந்திரன் அல்ல. சம்பந்தன் அல்ல. முழுமையான நேர்காணலை காணொளியில் காணலாம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.