தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு வழங்கும் ஆணை தமிழ்த் தேச அங்கீகாரத்துக்கானது 


தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் தெரிவித்த கருத்துகள் வருமாறு,

நாங்கள் மக்களை சந்திக்கும் போது பிரதானமாக மூன்று விடயங்களை சொல்லி வருகின்றோம்.


முதலாவது, இலங்கைத்தீவில் ஈழத்தமிழர்கள் மீது இழைக்கப்பட்டது இனப்படுகொலை அதற்கு சர்வதேச விசாரணையை கோரி நிற்கின்றோம்.

இரண்டாவது, மக்களின் இருப்பை தக்கவைப்பதற்கான ஒரு அதிகாரம் மிக்க பொருளாதார கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியே ஆக வேண்டும்.

மூன்றாவது, அரசியல் அமைப்பாக்க சபையிலே முன்வைக்கப்பட்டிருக்கின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை அடியோடு நிராகரிக்கிறோம்.

இந்த விடயங்களை எல்லாம் எம் மக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.

விடுதலைப் போராட்டத்தின் மௌனிப்புக் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டவர்கள் தமிழ்த் தேசிய அரசியலாக கையாளாது விட்டதன் விளைவாக மக்கள் 2020 ஆம் ஆண்டு தேர்தலில் மிகவும் வெறுப்படைந்தவர்களாக நாங்கள் யாருக்குப் போட்டென்ன என்று சலிப்படைந்தவர்களாக இருக்கிறார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் அரசியலை செய்ய முடியாத நிலையில் இருக்கிறது.

மக்களிடம் சென்று எமக்கு இறுதியாக ஒரு சந்தர்ப்பத்தை தந்து பாருங்கள். நாங்கள் கடந்த பத்து வருடங்களாக நேர்மையாகவும், உண்மையாகவும் மக்களுக்கு இந்த அரசியலை சொல்லி வருகின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பது வரும் தேர்தலுக்கான கட்சி அல்ல. அடுத்த தலைமுறைக்கானது. தமிழ்த் தேசத்தினுடைய இருப்புக்கானது. தமிழ்த் தேச அங்கீகாரத்துக்கானது என்கிற விடயங்களை நாங்கள் தெளிவுபடுத்தி வருகின்ற போது மக்கள் தயாராகி வருகிறார்கள். மிகுந்த நம்பிக்கையை எங்களுக்கு அளித்து வருகின்றார்கள்.

கடந்த பத்து வருடங்களாக நாங்கள் சொல்லி வந்த ஒவ்வொரு விடயங்களும் 2020 ஆம் ஆண்டு முற்றுமுழுதாக மக்களால் ஏற்கப்படுகின்ற அளவுக்கு அந்த அரசியலை செய்து வருகின்றோம்.

நாங்கள் கடந்த பத்து வருடங்களாக தோற்று தோற்று அரசியல் செய்த தரப்பு. ஆசனங்களுக்காக அரசியல் செய்யவில்லை. கொள்கைக்கான பயணம் என்பது பல தியாகங்கள் நிறைந்தது. உயிர்த்தியாகங்கள் செய்த ஒரு போராட்டத்தின் மீது தான் எங்களுடைய அரசியலை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.