அகிம்சை என்பது சாகத் துணிந்தவனின் ஆயுதம் (Video)


தமிழ்மக்கள் அகிம்சை வழியில் போராடவேயில்லை. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசய்யா 1990 ஆம் ஆண்டளவில் ஒருமுறை தனிப்பட்ட உரையாடலின் போது சொன்னார். திலீபனைப் போல ஒரு 500 பெடியங்கள் எங்களோடு இருந்திருந்தால் எங்களது போராட்டத்தின் கதையே வேறாகப் போயிருக்கும். இப்படி ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு தேவையே வந்திருக்காது. என்று... என்ன உண்மை என்று சொன்னால் தமிழரசுக் கட்சி அகிம்சைப் போராட்டத்தை ஒரு போராட்ட வடிவமாகக் கூட பார்க்கவில்லை. அது இதுக்கு மேல ஒன்றும் செய்ய ஏலாது என்று வரும் போது சாத்வீகம் என்று இறங்கியது. ஆனால் அதில் அவர்கள் உயிரைக் கொடுக்கவோ அல்லது சிறைக்குள் நீண்டகாலம் போய் இருக்கவோ தயாராக இருக்கவில்லை. நாங்கள் போய் அகிம்சைப் போராட்டம் என்று தொடங்க அவன் அடித்து இரத்தம் வரத் தொடங்க நாங்கள் பின்வாங்கி விட்டோம். காந்தியின் நிலைமை அப்படி அல்ல. அகிம்சைப் போராட்டம் என்பது ஒரு போராட்ட வடிவமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. புத்தரை, காந்தியைப் பொறுத்தவரை அது ஒரு வாழ்க்கை முறை. ஆனால் தமிழரசுக் கட்சியிடம் அது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கவில்லை. அது சாகப் பயந்தவனின் ஆயுதமாகத் தான் அங்கு இருந்தது. காந்தியைப் பொறுத்தவரை அது சாகத் துணிந்தவனின் ஆயுதம். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையிலும் அகிம்சை என்பது சாகப் பயந்தவன் ஓடி ஒழிக்கும் குகை அது. சாகப் பயந்தவன் அதற்குள் கவர் எடுத்துக் கொண்டான் என்பது தான் உண்மை. சாகப் பயந்த தமிழரசுக் கட்சி முன்னெடுத்த அகிம்சை வழிப் போராட்டங்கள் முழுமையானவை அல்ல. அவர்கள் அடிக்க அடிக்க இரத்தம் சிந்த இரத்தம் சிந்த அவர்கள் கொண்டு போய் சிறைக்குள் போடப் போட தொடர்ந்தும் நாங்கள் சிறை நிரப்பு போராட்டங்களை நடாத்தி இருப்போமாக இருந்திருந்தால் அரசையா சொன்ன மாதிரி ஒரு ஆயுதப் போராட்டத்துக்கான தேவையே வந்திருக்காது.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.