கோத்தாவின் அரைகுறைத் தீர்வுக்கு தமிழ் மக்களின் ஆணையைக் கோருகிறார் சம்பந்தன்?
ஒரு தீர்வுக்காக வாக்களியுங்கள் என சம்பந்தர் மேடைகளில் கேட்கத் தொடங்கி விட்டார். காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் தர மாட்டேன் என கோத்தபாய வெளிப்படையாகவே சொல்லி விட்டார். 13 பிளஸ் உம் இல்லை என்கிறார். அவர்கள் சிலநேரம் வெட்டிக் கொத்தி சம்பந்தருக்கு ஒரு தீர்வைக் கொடுக்கக் கூடும்.
தீர்வைப் பெறுவதற்கு சம்பந்தர் ஏகபோக பெரும்பான்மை வேண்டும் எனக் கேட்கிறார். அதன் மூலம் இடைக்கால அறிக்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகலாம் என நினைக்கிறார். அதற்கேற்றால் போல் ராஜபக்ச குடும்பமும் யாப்பை மாற்றப் போகிறோம் என்று சொல்கிறது. அடுத்து பொறுப்புக் கூறலுக்கு உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அவர்கள் யோசிக்கிறார்கள்.
ஏகபோக பெரும்பான்மை இம்முறை அசைக்கப்படலாம் என்கிற பயம் சம்பந்தனுக்கு வந்து விட்டது.
நிலைமாறுகால கட்ட நீதிக்கு கீழ் தான் உள்நாட்டு நீதிப்பொறிமுறையும் போதும் என்று ராஜபக்சக்கள் சொல்கிறார்கள். அவை போதுமா இல்லையா என்பதனை பரிசோதிக்கும் வழக்குகளை தான் ரட்ணவேல், குருபரன் போன்றவர்கள் முன்னெடுத்து வருகின்றார்கள். அப்படியொரு வழக்கை முன்னெடுத்ததால் தான் குருபரனுக்கு பிரச்சினை வந்துள்ளது.
Post a Comment