யாழ். கிட்டுப் பூங்காவிலிருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு பேரணி (Video)



சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஞாயிற்றுக்கிழமை (30.08.2020) வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.

காலை-11 மணியளவில் நல்லூர் கிட்டுப் பூங்காவிலிருந்து ஆரம்பமான பேரணி முத்திரைச் சந்தியைச் சென்றடைந்து அங்கிருந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைச் சென்றடைந்து கோவில் வீதியூடாக நாவலர் வீதியை அடைந்து ஐ. நாவின் வதிவிட அலுவலகத்தைச் சென்றடைந்தது.

மேற்படி பேரணியில் கலந்து கொண்டவர்கள் “உள்நாட்டுப் பொறிமுறையில் நம்பிக்கை இல்லை”, “இனவழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணையே வேண்டும்” ” எங்கே எங்கே உறவுகள் எங்கே?”, “ஐநாவே தலையிடு”, “ஐநா அமைதிப்படை வர வேண்டும்”, ” தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களையும் எழுப்பித் தமது கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

இந்தப் பேரணியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் க.சுகாஷ் மற்றும் காண்டீபன், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல் மற்றும் நீதிக்கான அவசர தேவை கருதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கையொன்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.