நான்காவது ஆண்டு நிறைவில் சிறகுகள் அமையம் (பகுதி 02)


(சிறகுகள் அமையத்தினரின் இரண்டாவது காணொளியில்...


கிராமங்கள், பாடசாலைகள் தோறும் நூலகம் என்கிற தூரநோக்குடன் சிறகுகள் அமையத்தினரால் முன்னெடுக்கப்படும் படிப்பகம் செயற்திட்டம் தொடர்பிலும், இணையத்தில் நூலகம் நிறுவனத்தினருடன் இணைந்து செயற்படுத்தி வரும் ஆவணகத்தின் கல்வி வழங்கல் சேகரத்துக்கு வழங்கி வரும் பங்களிப்புக்கள் தொடர்பிலும் மேலும் பல செயற்திட்டங்கள் தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களையும் முன்வைக்கிறார்கள் சிறகுகள் அமைய செயற்பாட்டாளர்கள்.)

நமது  தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள்   

கல்விக்கான இலட்சியப் பயணத்தில் பெருத்த நம்பிக்கையோடு பயணித்து வருகிறார்கள் எம் தாயகத்து தமிழ் இளையோர்கள். 

கடந்த பத்தாண்டுகளாக தமிழர் பிரதேசங்களில் கல்வியின் நிலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நேரத்தில் அதனை எப்படியாவது மீட்டெடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையோடு விடா முயற்சியுடன் தமிழர் பிரதேசமெங்கும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார்கள் சிறகுகள் அமைய செயற்பாட்டாளர்கள். 

அமைப்பில் எல்லோருக்கும் சமவாய்ப்பு, புரிந்துணர்வு, நம்பிக்கையான நட்புணர்வு, வேகத்துடனும் விவேகமாகவும் துணிச்சலுடனும் செயற்படல்,  உலகில் அன்றாட மாற்றங்களை உள்வாங்கி பயணித்தல் போன்ற சிறப்பியல்புகளோடு பயணிக்கிறது சிறகுகள் அமையம். 

2016 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் சிறு திரளாக 30 பேருடன் தம் நெடும் பயணத்தை ஆரம்பித்த இளையோர்கள் இன்று வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட இடங்களில் 400 க்கும் மேற்பட்ட செயற்பாட்டாளர்களுடன்     25.10.2020 அன்று நான்காவது ஆண்டு பயணத்தை நிறைவு செய்கிறார்கள். 

செயற்பாடுகளை இலகுவாக்க ஆறு மாவட்ட நிர்வாக பிரிவுகளாக பிரித்து பல்வேறு துறைகளையும் உருவாக்கி  முக்கியமான பல செயற்திட்டங்கள் சிறகுகள் அமையத்தினரால்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

படிப்பகங்களை உருவாக்குதல், நூல்களை  சேகரித்தல், கருத்தரங்குகளை நடாத்துதல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என மேலும் பல்வேறு பணிகளையும் சிறப்பான முறையில் முன்னெடுத்து  வருகின்றார்கள். 

பொருத்தமான அமைப்புக்கள், நிறுவனங்களுடன் இணைந்து பயணித்து வருவதோடு மேலும் பல அமைப்புகளுடன் இணைந்து செயற்பட ஆர்வமாகவும்  உள்ளார்கள். 

30 வயதுக்குள் இருக்கும் பாடசாலை கல்வியை நிறைவு செய்தவர்கள், பல்கலைக்கழக கல்வியை தொடர்பவர்கள் சிறகுகள் அமையத்தோடு இணைந்து பயணிக்கலாம்.     

சிறகுகள் அமைய செயற்பாட்டாளர்கள் இங்கே பேசுகிறார்கள். கேளுங்கள்.  இக்காணொளி இரண்டு பாகங்களாக  வெளிவருகிறது. முதல் பாகம் இதோ, 

 முதல் பாக காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...

 சிறகுகள் அமைய தொடர்புகளுக்கு -   

sirakukalinfo@gmail.com / 0094 7 6465 8482 / www.sirakukal.org


No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.