20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றம்: நடக்கப் போகும் விளைவுகள் என்ன? (Video)

 


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பின் 20 ஆவது திருத்த சட்ட வரைபு திருத்தங்களுடனும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் 22.10.2020 அன்று நிறைவேறியது. 

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், 

சிறிய தேசிய இனங்களுக்கு அச்சுறுத்தலான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி தனிச் சிங்கள பெரும்பான்மை வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுவிடுவோம் என ராஜபக்சக்கள் மார்தட்டிக் கொண்டார்கள். ஆனால் அது அவர்களால்  முடியவில்லை. வாக்கெடுப்பு விடுவதற்கு முதல் பேரம் பேசல், அச்சுறுத்தல் எல்லாமே நடந்தன. 

மலையகத்தின் ஒரு பிரதிநிதி உட்பட ஏனைய முஸ்லிம், தமிழ் பிரதிநிதிகளையும் சேர்த்தால் அங்கே தனிச் சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்கிற வாதம் அடிபட்டுப் போய் விடும். இப்போது மூவினத்தன்மை மிக்க மூன்றில் இரண்டு பெரும்பான்மை தான் 20 ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.  எனவே இது தனிச் சிங்கள வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட திருத்தம் அல்ல.  

ஆனால் இதில் உள்ள பயங்கரமான விடயம் என்னவென்று சொன்னால், எந்த சிறிய தேசிய இனங்களை அச்சுறுத்தி அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முயற்சித்தார்களோ அதே சிறிய தேசிய இனங்களின் சில பிரதிநிதிகளும் அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் என்பதும் தங்களுக்கு எதிரான ஒரு திருத்தத்துக்கு அவர்கள் எல்லோரும் சேர்ந்து கைகளை உயர்த்தி இருக்கிறார்கள் என்பதும் தான் இங்கே உள்ள  பயங்கரம். 


முழுமையான கருத்துக்களை காண காணொளியை  பாருங்கள்.

No comments

கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.

3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்

நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.