சுயாதீன பல்கலைக்கழகங்களை உருவாக்குவது பற்றி தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும்: கலாநிதி குருபரன்
இலங்கையில் அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமே உள்ளன. கொழும்பில் சில வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் தனியார் முகவர் அமைப்புகள் உள்ளன. அவை இலாபம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. எங்களுக்கு தேவை பொதுப் பல்கலைக்கழகங்கள். தமிழ் பரப்பில் உயர்கல்வி பற்றி சிந்திக்கும் போது இலாபநோக்கற்று அரசிடம் இருந்து விடுபட்ட சுயாதீனமாக இயங்கக் கூடிய பல்கலைக்கழகங்கள் அவசியமானது. நாங்களே தலைமைத்துவம் கொடுக்கும் மாற்றுப் பல்கலைக்கழகத்திற்கான தேவை வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார் சட்டத்தரணியும், முன்னாள் யாழ். பல்கலை சட்டத்துறை முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமரவடிவேல் குருபரன்.
Post a Comment