தமிழ்மக்கள் வெளிவிவகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் (Video)
இலங்கைத்தீவு பேரரசுகளின் உதைபந்தாட்டக் களமாக மாறி விட்டது. அரசைக் கையாள்வது தான் பேரரசுகளின் முதல் தெரிவாக இருக்கும். இந்தியா உட்பட. முதலில் இலங்கை அரசாங்கத்தைக் கையாளும், அப்படி அரசாங்கத்தை கையாள முடியாமல் போகும் போது தமிழ்மக்களை ஒரு கருவியாகக் கையாண்டு இலங்கை அரசாங்கத்தைப் பணிய வைக்கும். இதைத்தான் இலங்கை இந்திய உடன்படிக்கை வரையிலும் இந்தியா செய்தது.
திரும்பியும் அப்படியொரு நிலை தான் வரும். அரசைக் கையாள முடியாமல் போகும் போது அவர்கள் தமிழ்மக்களைக் கையாள்வார்கள். இந்த இடத்தில் தமிழ்மக்களை அவர்கள் கையாள முன் தமிழ் மக்கள் பொருத்தமான ஒரு வெளிவிவகாரக் கட்டமைப்பை உருவாக்க முன்வர வேண்டும். அப்படி உருவாக்கினால் தான் தமிழ்மக்கள் எப்படி புத்திசாலித்தனமாக வெளித்தரப்பைக் கையாளலாம் என யோசிக்கலாம்.
வெளிவிவகாரக் கொள்கை கட்சிகளுக்கானதல்ல. ஒரு தேசம் என்ற அடிப்படையில் அதனை உருவாக்குவது பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன். அவர் மேலும் தெரிவித்த பல விடயங்கள் காணொளியில் வருமாறு,
Post a Comment