உள்ளூராட்சி எனும் கருப்பொருளை விளங்கிக் கொள்ளல் (Video)
உள்ளூராட்சி எனும் கருப்பொருள் ஒரு மனிதன் சமூகமாக நிலத்திற்கு மேல் வாழத் தொடங்கிய பிறகு தான் வாழுகின்ற சூழலை எவ்வாறு கையாளுவது அதை பராமரிப்பது அதிலுள்ள வளங்களை தமக்குள் எவ்வாறு பங்கிடுவது என்கிற பல்வேறு வினாக்கள் அவர்களுக்கு தோன்றிய போது இயல்பாக உருவாகிய ஒழுங்குமுறை தான் உள்ளூராட்சி.
அதாவது தாங்கள் வாழ்கின்ற சூழலை எவ்வாறு கையாள்வது? அதைப் பராமரிப்பது. அதிலுள்ள வளங்களை எவ்வாறு பங்கிடுவது? போன்ற பல்வேறு வினாக்கள் அவர்களுக்கு தோன்றும் போது இயல்பாக உருவாகிய ஒரு ஒழுங்குமுறை தான் உள்ளூராட்சி. தாங்கள் வாழுகின்ற நிலப்பரப்பையும் வளங்களையும் தங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமான முறையில் ஆளுகை செய்தல். அரசுகள், அரசாங்கங்கள், முடியாட்சிகள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இயல்பாகவே உள்ளூராட்சி என்கிற விடயம் அந்தந்த சமூகங்களால் முன்னெடுக்கப்பட்ட விடயமாக உள்ளது. ஏனெனில் எந்த ஒரு மக்கள் தொகுதி நிலத்தோடு இணைக்கப்படுகிறதோ அந்த நிலத்தின் வளங்களை பராமரிக்காமல் விட்டால் அவர்களால் தங்கள் வாழ்க்கையை பேண்தகு நிலையில் பாதுகாக்க முடியாது. உள்ளூராட்சி தொடர்பிலான பல்வேறு விடயங்களையும் விளக்குகிறார் சமூக பொருளாதார ஆய்வாளரும், நிபுணத்துவ ஆலோசகருமான திரு. செல்வின் இரேணியஸ் மரியாம்பிள்ளை.
Post a Comment